அட்டகத்தில வந்த இவங்க யார் தெரியுமா ? அட, இந்த நடிகையோடு சொந்த அக்காவாம்.

0
17057
attakathi
- Advertisement -

தினேஷ் நடிப்பில் ப ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதே படத்தின் மூலம் தான் ரஞ்சித்தும் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் ரசிகர்களுக்கு பரிட்சயமில்லாத பலர் நடித்து இருந்தனர். அந்த வகையில் இந்த படத்தில் நதியா, திவ்யா என்று இரண்டு பெண்கள் நடித்து இருப்பார்கள்.

-விளம்பரம்-

அந்த காட்சியில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் வரும் நடிகை வெறு யாரும் இல்லை, இதே படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யாவின் அண்ணி தான். அதே போல நதியா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சோபியாவின் உடன் பிறந்த அக்கா தான் என்பது பலரும் அறிந்திராத ஒன்று. ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றி பல விஷயங்கள் அறிந்திருந்தாலும் அவருக்கு இரண்டு சகோதரர்கள் இருக்கிறார் என்பது பலரும் அறிந்திடாத ஒரு விஷயம். அதில் ஒரு சகோதரர், ஐஸ்வர்யா ராஜேஷின் சிறு வயதிலேயே இறந்து விட்டார்.

- Advertisement -

மற்றொரு சகோதரரான மணிகண்டன், சீரியல்களில் நடித்து வருகிறார். வள்ளி, கேளடி கண்மணி, அழகு சீரியல்களில் நடித்துள்ளார். இவரது மனைவி தான் அட்டகத்தி படத்தில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சோபியா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்.

Aishwarya Rajesh's brother and his actress wife enter reality television -  Tamil News - IndiaGlitz.com

மேலும், இவர் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘லட்சுமி’ படத்திலும் நடன ஆசிரியராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மணிகண்டன் மற்றும் சோபியா இருவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸர் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டனர் ஆனால், சமீபத்தில் சோபியாவிற்கு ஏற்பட்ட சில உடல் நல பிரச்சனை காரணமாக இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தனர்.

-விளம்பரம்-
Advertisement