நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் அயலான். இந்தப் படத்தை இயக்குனர் ரவிக்குமார் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு, பாலா சரவணன், பானுப்ரியா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்து இருக்கிறார். பல சிரமங்களுக்குப் பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து இன்று வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
ஏலியன் ஜானரில் இந்த படத்தை இயக்குனர் கொடுத்திருக்கிறார். வேற்று கிரகத்தில் உள்ள கல் ஒன்று பூமியில் விழுகிறது. அது வில்லன் கையில் கிடைக்கிறது. அவன் மைனிங் செய்து பூமியை ஓட்டை போட்டு சில ஆயுதங்களைத் தேட முயற்சிக்கிறார். அப்போது அதில் இருந்து வெளிவந்த நச்சு வாயால் நிறைய மக்கள் இருக்கிறார்கள். இது அந்தக் கல் வந்த கிரகத்தில் வாழும் உயிரினமான ஏலியனுக்கு தெரிகிறது. பின் ஏலியன், பூமி முக்கியம்.
அதைக் காப்பாற்ற வேண்டும் என்று ஒரு ஏலியனை பூமிக்கு அனுப்புகிறது. அந்த ஏலியன் புழு பூச்சிக்கு கூட துரோகம் நினைக்காத ஹீரோ சிவகார்த்திகேயனிடம் செல்கிறது. பிறகு அந்த மைனிங் ப்ராஜெக்ட் சென்னைக்கு வருகிறது. சிவகார்த்திகேயன் மற்றும் அந்த ஏலியன் இருவரும் இணைந்து சென்னையை காப்பாற்றினார்களா? அந்த வில்லனை அரசாங்கத்திடம் ஒப்படைத்தார்களா? பூமிக்கு வந்த அந்த கல்லால் மக்களுக்கு நல்லது நடக்கிறதா? என்பதே படத்தின் மீதி கதை.
ஏலியன் என்றாலே கெட்டவர்கள், பூமிக்கு அழிவு என்பதை பல ஹாலிவுட் படங்களில் பார்த்திருப்போம். ஆனால், ஏலியனால் உலகம் காப்பாற்றப்படுகிறது என்பதை இயக்குனர் இந்த படத்தில் காண்பித்து இருக்கிறார். இது புது முயற்சி என்று சொல்லலாம். குழந்தைகள் கொண்டாடும் விதமாக இந்த படத்தை இயக்குனர் கொடுத்து இருக்கிறார். படத்தில் யானையில் இருந்து எறும்பு வரை என அனைத்தும் குழந்தைகளுக்கு பிடிக்கும் விதமாக இந்த படத்தை இயக்குனர் சிறப்பாக காண்பித்து இருக்கிறார்.
குறிப்பாக, சிவகார்த்திகேயன் உடைய நடிப்பும் நன்றாக இருக்கிறது. மேலும், இந்த உலகம் அனைத்து உயிருக்கும் சொந்தமானது என்பதை இயக்குனர் அழுத்தமாக சொல்லி இருக்கிறார். படத்தில் சிவகார்த்திகேயன் காமெடி மட்டும் இல்லாமல் யோகி பாபு, கருணாகரன் காமெடி, கவுண்டர் எல்லாம் சூப்பர். இவர்களுடன் ஏலியன் சேர்ந்து செய்யும் லூட்டி அளவே இல்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் படியாக இருக்கிறது.
படத்தில் சிஜி ஒர்க் எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனால், சில காட்சிகள் ஹாலிவுட் படங்களை பார்த்தது போலவே இருக்கிறது. அதை தவிர்த்திருக்கலாம். படத்தினுடைய இரண்டாம் பாதி நன்றாக இருக்கிறது. ஆனால், கிளைமாக்ஸ் காட்சி விறுவிறுப்பாக கொடுத்து இருக்கலாம். அதிலும், ஏலியன் பிரிந்து செல்லும் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் எமோஷனல் கொடுத்திருந்தால் ஆடியன்சை கனெக்ட் செய்திருக்கும்.
வழக்கம்போல கார்ப்பரேட்டை தான் வில்லனாக படத்தில் காண்பித்து இருக்கிறார்கள். இது கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கு ஏற்ப வில்லனையும் புதுமுகமாக கொடுத்திருப்பதால் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. ஒளிப்பதிவு, பின்னணி இசை எல்லாமே ஓகே. ஆனால், பாடல்கள் தான் பெரிதாக இல்லை. மொத்தத்தில் இந்த பொங்கலுக்கு குழந்தைகள் ரசிக்கும்படியாக தான் ஏலியன் இருக்கிறது.
நிறை:
ஏலியன் சம்பந்தமான காட்சி ஓகே
கிராபிக்ஸ் ஒர்க் நன்றாக இருக்கிறது
குழந்தைகளுக்கான படம்
சிவகார்த்திகேயன் நடிப்பு ஓகே
இரண்டாம் பாதி நன்றாக இருக்கிறது
காமெடி சூப்பர்
குறை:
கிளைமாக்ஸ் காட்சி இன்னும் எமோஷனலாக இருந்திருக்கலாம்
முதல் பாதி கொஞ்சம் விறுவிறுப்பாக கொடுத்து இருக்கலாம்
பாடல்கள் கவரவில்லை
வில்லன் கதாபாத்திரத்தை சிறப்பாக காண்பித்திருக்கலாம்
சில காட்சிகள் ஹாலிவுட் படங்களை நினைவுபடுத்திருக்கிறது
மொத்தத்தில் அயலான்- குழந்தைகள் கொண்டாடும் படம்