அருண் விஜயின் மிஷன் சாப்ட்டர் 1 படம் சக்ஸஸா? பெயிலியரா? முழு விமர்சனம் இதோ

0
528
- Advertisement -

நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் மிஷன் சாப்ட்டர் 1. இயக்குனர் விஜய் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை எமி ஜாக்சன் தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் நிமிஷா சஜயன், பரத் போப்ன்னா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஆதி காலத்திலேயே ஊடுருவி இருக்கிறார்கள் என்பதை அனைவரும் அந்த ஒன்றே. இது தொடர்பாக படங்களில் எல்லாம் கூட பார்த்திருப்பார்கள். அந்த மாதிரி தான் இந்த படத்தில் இந்தியாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி இருக்கிறார்கள். இவர்களுடைய நோக்கம் இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டினை தடுக்க வேண்டும் என்பதுதான். இது இந்திய அரசுக்கு தெரிய வருகிறது. உடனே தீவிரவாதிகள் தங்களுடைய கூட்டாளிகளை மீட்க இந்தியாவில் இருந்து வெளியேறி லண்டனுக்கு செல்கிறார்கள்.

- Advertisement -

லண்டனில் தீவிரவாதிகள் அடைக்கப்பட்டிருக்கும் அதி நவீன சிறை இருக்கிறது. இந்த சிறையின் ஜெயிலராக எமி ஜாக்சன் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் தான் அருண் விஜய் தன்னுடைய குழந்தையுடைய மருத்துவ தேவைக்காக லண்டன் செல்கிறார். அங்கு அவருடைய பரிசை யாரோ ஒருவர் திருட பார்க்கிறார். இதை அருண் விஜய் தடுக்க நினைக்கிறார். இதனால் திருடர்களுடன் சண்டையில் அருண் விஜய் ஈடுபடுகிறார். பின் அருண் விஜயை போலீஸ் தீவிரவாதிகள் அடைக்கப்பட்ட சிறையில் அடைக்கின்றார்கள்.

இன்னொரு பக்கம் சிறையில் இருக்கும் தீவிரவாதிகளை மீட்க சிறை முழுவதும் ஹாக் செய்யப்படுகின்றது. அப்போது ஜெயிலில் இருக்கும் குற்றவாளிகளும் தீவிரவாதிகளும் தப்பிக்க முயற்சி செய்கிறார்கள். இது அருண் விஜய்க்கு தெரிய வருகிறது. இவர்களை தடுக்க அவர் முயற்சி செய்கின்றார். இறுதியில் தீவிரவாதிகள் தடுக்கப்பட்டார்களா? அருண் விஜய் குழந்தைக்கு ஆபரேஷன் செய்யப்பட்டதா? அருண் விஜய் விடுதலை செய்யப்பட்டாரா? தீவிரவாத கும்பலால் அருண் விஜய்க்கு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை.

-விளம்பரம்-

ஒரு சாதாரண கதையை இயக்குனர் ஆக்சன் காட்சிகளால் கொண்டு சென்றிருக்கலாம். ஆனால், படத்தில் பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சுவாரசியமும் சண்டை காட்சிகளும் இல்லை. படம் முழுக்கவே வில்லன் கேமரா முன் என்று தான் பேசிக் கொண்டிருக்கிறார். அவருடைய ஆக்ஷன் ஒன்றுமே இல்லை. இறுதி ஒரு சண்டை மட்டும்தான் அவர் செய்கிறார். அதுவும் ரசிக்கும்படியாக இல்லை. எமி ஜாக்சனும் படம் முழுக்க பேசிக் கொண்டுதான் இருக்கிறாரே தவிர அவருடைய செயலில் ஒன்றுமே இல்லை.

ஒரு சில காட்சியில் மட்டும் தான் அவருடைய நடிப்பு பாராட்டை பெற்றிருக்கிறது. அருண் விஜயின் நடிப்பு ஓகே. ஆனால், ரசிகர்கள் எதிர் பார்த்த அளவிற்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். கதைக்களம் நன்றாக இருந்தாலும் அதை கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் கவனம் செலுத்தி இருக்கலாம். மொத்தத்தில் பொங்கல் வரைக்குமே மிஷன் தாக்கு பிடிக்குமா? என்று தெரியவில்லை. சமீப காலமாக அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த படங்கள் நன்றாக இருக்கும் நிலையில் இந்த படம் அவருக்கு தோல்விதான்.

நிறை:

அருண் விஜய் நடிப்பு ஓகே

திரைக்கதை நன்றாக இருக்கிறது

சில இடங்களில் வசனங்கள் ஓகே

மற்றபடி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு படத்தில் ஒன்றுமே இல்லை

குறை:

இயக்குனர் கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்தில் அதிக கவனம் செலுத்தி இருக்கலாம்

ஆக்சன் காட்சிகளால் படத்தை நிரப்பி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்

படத்திலும் நடிகர்களுடைய கதாபாத்திரத்தை இன்னும் அழுத்தமாக சொல்லி இருக்கலாம்

நிறைய லாஜிக் குறைபாடுகள்

மொத்தத்தில் மிஷன் சாப்டர் 1- தாக்கு பிடிக்கவில்லை

Advertisement