விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அழகே அழகு சீரியலில் தங்கராஜ், பாக்கியராஜுக்கு ப்ரமோஷன் கிடைத்த விஷயத்தை வீட்டில் சொல்வதற்காக வந்தார். ரேவதி இதைப் பற்றி பாக்கியராஜ், மலரிடம் சொல்லிவிட்டார். அதற்குப்பின் தங்கராஜ் வீட்டில் உள்ள எல்லோரையும் அழைத்து பாக்கியராஜ் ப்ரமோஷன் கிடைத்த விஷயத்தை பற்றி சொன்னார். எல்லோருமே ஷாக் ஆனார்கள். பின் பாக்யராஜை திட்டி அவமானப்படுத்துவார்கள் என்று தங்கராஜ் திட்டம் போட்டார். ஆனால், யாரும் பாக்யராஜை திட்டாமல் வாழ்த்துக்கள் சொன்னார்கள். இதை பார்த்து தங்கராஜ்க்கு அதிர்ச்சி ஆக இருக்கிறது.

மதி, மலர் இருவருமே வீட்டில் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். சுரேஷ் குடித்து வைத்த டீ டம்ளரை மதி எடுக்கவில்லை என்று மாமியார் லட்சுமி கோபமாக இருந்தார். மதி, என்ன செய்யணும் என்றார். ஆனால், எதுவும் பேசாமல் லட்சுமி முறைத்தார். பின் மதி தன்னுடைய வேலையை செய்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் கொந்தளித்த லட்சுமி, உன் புருஷன் குடித்த டம்ளரை கூட எடுத்து வைக்க முடியாதா? இதுதான் உங்கள் வீட்டில் சொல்லிக் கொடுத்ததா? என்று திட்டினார். மதி, உங்கள் பிள்ளைக்கு நீங்கள் ஒழுங்காக சொல்லிக் கொடுத்தீர்களா? சாப்பிட்ட தட்டை எடுத்து போடணும். துணியை ஒழுங்காக போடணும் என்று நீங்கள் சொல்லிக் கொடுத்தீர்களா? உங்களுடைய வளர்ப்புக்கு என்னுடைய அப்பா அம்மா என்னை நல்லாவே வளர்த்திருக்கிறார்கள் என்றார்.
அழகே அழகு:
மலர் எவ்வளவு தடுத்துமே மதி கேட்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமி நெஞ்சுவலி வந்தது போலவே நடித்தார். மலரும் தன்னுடைய மாமியாருக்கு உதவி செய்தார். ஆனால், மதி அதை கண்டுகொள்ளவே இல்லை. லட்சுமி நடிக்கிறார் என்று மலருக்கும் தெரியும். இருந்தாலும் மலர் தண்ணி வேண்டுமா, மாத்திரை வேண்டுமா, ஹாஸ்பிடல் போகலாம் என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து மாமனார் வந்து விட்டார். மதியை பற்றி ரொம்பவே தப்பு தப்பா லட்சுமி பொய் சொன்னார். உடனே கொந்தளித்த மாமனார், சுரேஷிற்கு ஃபோன் செய்து வீட்டிற்கு வர வைத்தார். ஆனால், அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் மதி அமைதியாக தான் இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் பாக்யராஜ்க்கு போன் செய்த மலர், வீட்டில் நடந்த எல்லா விஷயத்தையும் சொல்கிறார். பாக்கியராஜ் கிளம்பி வீட்டிற்கு வருகிறார். லட்சுமி நெஞ்சு வலி வந்தது போல நடித்துக் கொண்டு மதியை ரொம்ப மோசமாக பேசிக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து சுரேஷ் வீட்டிற்கு வருகிறார். சுரேசை பார்த்தவுடன் லட்சுமி ஓவர் ஆக்டிங் செய்கிறார். அதோடு மதி சொல்லாத வார்த்தை எல்லாம் சொன்னதாக சொல்கிறார். சுரேஷிற்கு கோபம் தான் வருகிறது. மதி நடந்ததை சொல்ல வருகிறார். ஆனால், அதை சுரேஷ் காது கொடுத்து கூட கேட்கவில்லை.

சீரியல் ட்ராக்:
வீட்டில் பெரிய கலவரத்தையே லட்சுமி செய்து கொண்டிருக்கிறார்.. அதற்கு அவர் கணவரும் உடந்தையாக இருக்கிறார். லட்சுமி, மதியின் அப்பா அம்மாவிற்கு போன் செய்து வீட்டிற்கு வர வைக்கிறார்கள். மதியின் அப்பா-அம்மாவை பார்த்து ரொம்ப மோசமாகவும் அவமானப்படுத்தியும் பேசுகிறார்கள். மதியால் எதுவும் பேச முடியவில்லை. பின் மதியின் பெற்றோர்கள் அறிவுரை சொல்கிறார்கள். மதி சொல்வதை யாரும் கேட்கவே இல்லை






