விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அழகே அழகு சீரியலில் மலர், தன் கணவர் பிரச்சனையில் இருப்பதை புரிந்து கொண்டு விசாரித்தார். பாக்கியராஜ் உண்மையை சொல்லிவிட்டார். பின் மலர், தன்னிடம் இருந்த பணத்தை கொடுத்து வண்டியை மீட்க சொன்னார். பாக்கியராஜ் வேண்டாம் என்று மறுத்தார். இருந்தாலும் மலர் கட்டாயப்படுத்தியதால் பாக்கியராஜ் பணத்தை வாங்கிக் கொண்டார். அதற்கு பின் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். வழக்கம்போல மதி, தேவையில்லாத பொருட்களை தட்டில் வையுங்கள் என்றார்.இதனால் மாமியார் மாமனார் எல்லோருமே மதி இடம் சண்டை போட்டார்கள்.

ரேவதிக்கு போன் செய்து பாக்கியராஜ் விசாரித்தார். ரேவதி உண்மையை சொல்ல முடியாமல் அழுது கொண்டே ஒன்றும் இல்லை என்றார். இருந்தாலும் ரேவதி கஷ்டத்தில் இருப்பதை புரிந்து கொண்டு பாக்யராஜும் ரொம்பவே கஷ்டப்பட்டார். அதற்குப்பின் வீட்டில் மதி, ஆன்லைனில் மாணவர்களுக்கு கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்தார். இதை கவனித்த மாமியார் வழக்கம் போல மதியை திட்டிக் கொண்டிருந்தார். மலர் எடுத்துச் சொல்லி புரிய வைத்தார். ஆனால், மாமியார் கேட்ட பாடு இல்லை. கோபத்தில் மாமியார், மதி லேப்டாப்பை மூடி வைத்து விட்டார்.
அழகே அழகு:
அதோடு மாமனார் கணவர் வீட்டில் இருந்தார்கள். அவர்களுக்கு வேலை செய் என்றெல்லாம் கண்டிஷன் போட்டார். இதையெல்லாம் கேட்டு மதிக்கு கோபம் வருகிறது. அதோடு அந்த இடத்தில் இருந்த சுரேஷ், இதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலையை செய்து கொண்டிருந்தார். இதனால் மதி, உங்கள் வீட்டில் இவ்வளவு கண்டிஷன் போட்டார்கள். எதுவுமே பேசாமல் இருக்கிறீர்கள் நியாயமா? என்றார். சுரேஷ், எல்லாத்துக்கும் குறை சொல்லாதே. என் அம்மா அப்பா சொல்வதை மட்டும் கேளு. அதுதான் உன் வேலை என்று திட்டி விட்டு சென்றார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தங்கராஜிற்கு தெரிந்தவர் பாக்யராஜ் பேங்கில் லோனுக்கு ஏற்பாடு செய்து தர சொல்லி கேட்கிறார். உடனே தங்கராஜ், பாக்யராஜ் பேங்கிற்கு ஃபோன் செய்து விசாரிக்கிறார். அப்போது பாக்யராஜுக்கு ப்ரோமோஷன் கொடுத்து அவருக்கு வேறொரு டிபார்ட்மெண்டில் அனுப்பி இருக்கும் விஷயத்தை எல்லாம் தங்கராஜ் தெரிந்து கொள்கிறார். வீட்டில் யாரிடமும் உண்மையை சொல்லாமல் பாக்கியராஜ் மறைத்திருப்பதை நினைத்து தங்கராஜ் கோபப்படுகிறார். இன்னொரு பக்கம் மலர், வீட்டு வேலைகள் எல்லாம் செய்து கொண்டிருக்கிறார். எல்லோரும் கேட்பதையும் செய்கிறார்.

சீரியல் ட்ராக்:
இது எல்லாம் பார்த்து மதிக்கு கோபம் தான் வருகிறது. மதி, மலரை வேலை செய்ய வேண்டாம் என்று திட்டுகிறார். உடனே அங்கு வந்த மாமனார், மலரை திட்டி விட்டு மாமியார் ரூமுக்கு அனுப்பி வைக்கிறார். அங்கு சென்றால் பக்கத்தில் இருக்கும் தண்ணியை கூட எடுத்து குடிக்க முடியாமல் மலரை தான் மாமியார் வேலை வாங்குகிறார். இதையெல்லாம் பார்த்து மலரால் எதுவுமே பேச முடியல. ஆனால், மதிக்கு பயங்கர கோபம் வருகிறது. இவர்களைப் போலவே சுரேஷ் நடந்து கொள்வதால் மதி, சுரேஷிடம் சண்டை போடுகிறார். இன்னொரு பக்கம் தங்கராஜ், பாக்யராஜுக்கு ப்ரமோஷன் கிடைத்திருக்கும் விஷயத்தைப் பற்றி ரேவதி இடம் கேட்கிறார். ஆனால், ரேவதி தனக்கு எதுவும் தெரியாது போலவே நடிக்கிறார்






