‘விஜய் சார் என்ன திட்டி அனுப்பிட்டாரு’ – மாஸ்டர் படத்தில் இருந்து பாதியில் விலகியிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம்.

0
447
master
- Advertisement -

தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் பிரம்மாண்ட அளவில் மாபெரும் சாதனை படைத்தது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். மேலும், மாஸ்டர் திரைப்படம் தமிழ் மொழியில் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது. மாஸ்டர் படத்தில் விஜயுடன் நடித்த சிபி தற்போது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக விளையாடிக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் சிபி டைட்டில் வின்னர் ஆகுவரா? மாட்டாரா? என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு பக்கமிருக்க மாஸ்டர் படத்தின் வாய்ப்பை பிரபல சீரியல் நடிகர் தவறவிட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அவர் வேறு யாரும் இல்லைங்க பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் எழில் தான். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

- Advertisement -

பாக்கியலட்சுமி எழில் :

இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற தொடரின் சுசித்ராவும் கணவராக சதீசும் நடித்து வருகிறார்கள். இந்த தொடரில் எழில் கதாபாத்திரத்தில் விஜே விஷால் நடித்து வருகிறார். மேலும், இல்லத்தரசிகளின் பேவரட் சீரியலாக இந்த தொடர் திகழ்கின்றது. இது குடும்ப பெண்கள் தங்கள் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்தி உருவாகி உள்ளது. இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

மாஸ்டர் பட வாய்ப்பு :

இந்நிலையில் எழில் மாஸ்டர் பட வாய்ப்பை தவற விட்டதை குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, மாஸ்டர் படத்தின் ஷூட்டிங்கில் நான் இருந்தேன். அப்போது எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் நான் வெளியே வந்துவிட்டேன். அதுவும் விஜய் அண்ணா தீட்டி அதுக்கப்புறம் தான் நான் வெளியே வந்தேன். அவரு என்னைப் பற்றி விசாரித்துவிட்டு என்னுடைய வீட்டிற்கு போன் பண்ணி சொல்லி எனக்கே தெரியாமல் என்னை அடுத்த நாள் பேக் பண்ண வைத்துவிட்டார். பின் என்னை திட்டி உன்னுடைய உடல் நலம் தான் முக்கியம்.

-விளம்பரம்-

விஜய் குறித்து விஷால் :

படம் அப்புறம் பண்ணிக்கலாம் என்று அட்வைஸ் செய்தார். ஒருநாள் என்னை சூட்டிங் ஸ்பாட்டில் விஜய் அண்ணா கூட உட்கார வைத்து என்ன பண்ணிட்டு இருக்கீங்க? என்று கேட்டார். நானும் ஜோடி நம்பர் 1 என்ற நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடினேன். விஜய் டிவியில் தான் இருக்கிறேன் என்று சொன்னேன். உடனே அவர் நீ நல்ல டான்ஸ் ஆடுவ போல? என்று என்னைத் தட்டிக் கொடுத்துப் பேசினார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அப்புறம் அவர் பிக்பாஸ் பற்றியெல்லாம் நிறைய கேட்டாரு. அவங்க பொண்ணுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி ரொம்ப பிடிக்குமாம். அதுல தர்ஷன் உடைய மிகப்பெரிய ரசிகையாம் என்று இந்த மாதிரி எல்லாம் நிறைய விஷயம் அவர் என் கூட பேசி இருக்காரு.

என்னை பத்தி அவ்வளவா தெரியாது. இருந்தாலும் அவருடைய நண்பர்களிடம் பழகுற மாதிரி தான் என்னிடம் பேசினார். அந்த வாய்ப்பை தவறவிட்டது நினைத்து எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று கூறினார். விஜே விஷால் முதன்முதலில் விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 என்ற நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டார். அதன் பின் இவர் முதன்முதலாக கல்யாணமாம் கல்யாணம் என்ற சீரியலில் நடித்தார். அதை தொடர்ந்து அரண்மனைக்கிளி என்ற சீரியலில் நடித்து உள்ளார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Advertisement