பாக்கியலட்சுமி : ராதிகாவுடன் தனியாக சென்ற கோபிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

0
2395
- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியலின் புதிய அப்டேட் குறித்த புரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக செல்கின்றது. இதனால் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மேலும், இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி என்ற கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது. பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை, என்பதை இந்த சீரியல் உணர்த்துகிறது. தற்போது சீரியலில் ராதிகா- கோபி இருவரும் பாக்யாவின் வீட்டிற்கு வந்துவிடுகிறார்கள். வீட்டில் உள்ள எல்லோரும் அவர்களை வெளியே அனுப்ப பார்க்கிறார்கள்.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

ஆனால், இருவரும் போகாமல் வீட்டிலேயே இருக்கிறார்கள். என்ன செய்வதென்று புரியாமல் பாக்யாவும், மொத்த குடும்பமும் நிம்மதியை இழந்து தவித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு எபிசோடும் ராதிகா- ஈஸ்வரிக்கு இடையே சண்டை சச்சரவு நடந்து கொண்டே இருக்கிறது. இதற்கு கோபி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ராதிகா கோபப்பட்டு ஈஸ்வரியை திட்டி விடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த பாக்கியா, கோபியையும் ராதிகாவையும் வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார்.

சீரியலின் கதை:

அதற்கு கோபி, நீ இந்த வீட்டிற்க்கான முழு தொகையும் கொடுத்தால் தான் செல்வேன் என்று பாக்யாவிடம் சொல்கிறார். இதனால் பாக்கியா இன்னும் ஒரு மாதத்திற்குள் நான் மீதி 18 லட்சம் ரூபாயை கொடுத்து விடுகிறேன். அதற்குப்பின் நீங்கள் இருவரும் இந்த வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று சவால் விடுகிறார். மேலும், தான் போட்ட சவாலில் வெற்றி பெற வேண்டும் என்று பாக்யா ஒரு புதிய சமையல் ஆர்டரை வாங்குகிறார். இது 5000 பேருக்கு சமைக்க வேண்டிய கேட்டரிங் ஆர்டர். இதற்காக இவர் மூன்று நாட்கள் தங்கி சமைக்க வெளியூருக்கு செல்கிறார்.

-விளம்பரம்-

புதிய அப்டேட் ப்ரோமோ:

இன்னொரு பக்கம் கோபி அதே திருமணத்திற்கு தன்னுடைய மனைவி ராதிகாவுடன் வருகிறார். இந்த நிலையில் அடுத்து என்ன நடக்குமோ? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் போது பாக்கியலட்சுமி சீரியல் குறித்த புரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில், ராதிகா-கோபி இருவரும் ரொமான்ஸ் செய்கிறார்கள். செல்வி இருப்பதை கண்டு ராதிகா கோபப்பட்டு கோபி இடம் சொல்கிறார். ஆனால், ஏற்கனவே கோபி, பழனிச்சாமியை பார்த்து இருக்கிறார்.

சீரியல் டீவ்ட்ஸ்ட்:

பின் அவர் பாக்கியாவும் இங்கு தான் இருக்கிறார் என்று நினைத்து கவலைப்படுகிறார். ஆகவே, இந்த வாரம் பாக்கியா தான் போட்ட சவாலில் வெற்றி பெறுவாரா? கோபி- ராதிகா வீட்டை விட்டு வெளியே செல்வார்களா? கோபினால் பாக்கியா எடுத்திருக்கும் பெரிய கேட்டரிங் ஆர்டரில் ஏதாவது பிரச்சனை வருமா? என்று பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் செல்ல இருக்கிறது. இதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்

Advertisement