மாமன்னன் படம் என் கதையின் சாயலில் இருக்கிறன்றது என்றால் – முன்னாள் சபாநாயகர் தனபால் பேட்டி

0
1937
Dhanabal
- Advertisement -

மாமன்னன் படம் குறித்து முன்னாள் சபாநாயகர் தனபால் அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். எவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கின்றது . அந்த வகையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் மாமன்னன். இந்த படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இவர்களை தொடர்ந்து வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். மேலும், அனைவரும் எதிர்பார்த்த உதயநிதியின் மாமன்னன் படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. படத்தில் எல்லோரும் தனக்கு கீழ் தான் அடங்கி நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஆதி வர்க்கத்தினருக்கும், சமுதாயத்தில் முன்னேறி வாழ வேண்டும் என்று அனைவரையும் சமமாக பார்க்கும் பட்டியலின மக்களுக்கும், இடையே நடக்கும் போராட்டம் தான் மாமன்னன் திரைப்படம்.

- Advertisement -

மாமன்னன் படம்:

இப்படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தையும், அரசியலையும் ஆதிக்க வர்க்கத்தினர் எப்படி பயன்படுத்தி கொள்வார்கள் என்பதை இயக்குனர் சொல்லி இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று வருகிறது. மேலும், மாமன்னன் படம் ஜாதியைப் பற்றி பேசி இருக்குமோ? என்றெல்லாம் பலரும் விவாதித்து இருந்தார்கள். ஆனால், அதிமுகவை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தனபாலின் வாழ்க்கை கதையை தான் படத்தில் காட்டி இருக்கிறார்கள் என்ற சர்ச்சை தற்போது தொடங்கி இருக்கிறது.

படம் குறித்த சர்ச்சை:

படத்தில் சொன்னது போல பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் தான் தனபால். இவருக்கு சபாநாயகர் பதவியை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து இணையத்தில் திமுகவை விமர்சித்தும், ஜெயலலிதாவை புகழ்ந்தும் பேசி இருந்தார்கள். இன்னொரு பக்கம் உதயநிதி ஸ்டாலின் ஏன் அதிமுகவிற்கு ஆதரவான கதையில் நடித்திருக்கிறார் என்றெல்லாம் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

-விளம்பரம்-

சபாநாயகர் தனபால் அளித்த பேட்டி:

இந்த நிலையில் இது தொடர்பாக சபாநாயகர் தனபால் இடம் கேட்டபோது அவர் கூறியிருந்தது, சோசியல் மீடியாவில் வருவதெல்லாம் உண்மைதான். நேற்றிலிருந்து நிறைய பேர் என்னை தொடர்பு கொண்டு இந்த படம் தொடர்பாக பேசி இருந்தார்கள். மேலும், அமைச்சர் உதயநிதி நடிக்க அவங்க குடும்ப நிறுவனம் தயாரித்த படத்தின் கதை என்னைப் பற்றி இருக்கும் என்று அவர்கள் சொல்லி தான் தெரிந்து கொண்டேன். நான் 70களில் இருந்து அதிமுகவில் இருக்கிறேன். என்னுடைய விசுவாசத்தையும் கட்சிப் பணியில் நான் காட்டிய ஆர்வத்தையும் பார்த்து தான் அம்மா எனக்கு பெரிய பெரிய பதவிகள் தந்தார்கள்.

மாமன்னன் படம் குறித்து சொன்னது:

கட்சியில் அமைப்பு செயலாளர் ஆக்கினார். அதற்கு பிறகு தான் அமைச்சர் ஆனேன். இதனைத்தொடர்ந்து துணை சபாநாயகர் பிறகு சபாநாயகர் ஆனேன். இது போன்ற எல்லா பதவிகளும் அம்மா என் மீது நம்பிக்கை வைத்து தந்தது தான். அந்த நம்பிக்கைக்கு சீர்குழையாமல் நானும் என் பதவி காலத்தில் திறமையாக பணிபுரிந்தேன். மீதி இருக்கும் காலத்தில் இந்த இயக்கத்துக்காகவே உழைப்பேன். தற்போது வெளிவந்த மாமன்னன் படம் என் கதையின் சாயலில் இருக்கிறன்றது என்றால், அது அம்மாவிற்கு கிடைத்த வெற்றியாக தான் நான் பார்க்கிறேன். அதுக்காக படத்தை எடுத்து அதில் நடித்த உதயநிதிக்கு நன்றி. படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. இனிமேல் தான் பார்க்கணும் என்று தனபால் கூறியிருக்கிறார்.

Advertisement