பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் எஸ்டிபி ரோசரியின் குடும்ப புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள்.
இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா, லட்சுமணன், ரேஷ்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இல்லத்தரசிகளின் பேவரட் சீரியலாக பாக்கியலட்சுமி திகழ்கின்றது. இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது. பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை இந்த சீரியல் உணர்த்துகிறது.
பாக்கியலட்சுமி சீரியல்:
தற்போது சீரியலில் கோபி பாக்கியாவை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று முடிவு செய்கிறார். இதனால் ஒரு மாதத்திற்குள் வீட்டின் மொத்த பணத்தையும் கொடுக்க வேண்டும் என்று பாக்யாவிடம் கூறுகிறார். பணத்தை ஏற்பாடு செய்ய பாக்யாவும் புரட்டுகிறார். இன்னொரு பக்கம் எழிலும் அலைகிறார். ஆனால், பணம் புரட்ட முடியவில்லை. இதனால் ஈஸ்வரி தயாரிப்பாளரின் மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எழிலை கட்டாயப்படுத்துகிறார்.
சீரியலின் கதை:
இதனால் எழிலும் திருமணத்திற்கு வேறு வழி இல்லாமல் ஒத்துக் கொள்கிறார். இந்த உண்மை பாக்யாவிற்கு தெரிந்தவுடன் திருமணத்தை நிறுத்தி எழிலுக்கும் அமிர்தாவிற்கும் திருமணம் செய்து வைக்கிறார். இந்த திருமணத்தை பாட்டி ஈஸ்வரி ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னொரு பக்கம் வீட்டை காலி செய்ய கோபி சொல்கிறார். பின் தாத்தா என்னுடைய சொத்துக்களை எல்லாம் எழுதி தருகிறேன் என்று கூறுகிறார். இதை ஏற்றுக் கொண்ட கோபி தற்போது வீட்டின் மதிப்பிற்கு உங்களுடைய சொத்து பத்தாது. இன்னும் 20 லட்சம் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்.
எஸ்டிபி ரோசரி குறித்த தகவல்:
இந்த கேண்டினின் மூலம் பாக்கியா வெற்றி பெறுவாரா? கோபியிடம் இருந்து தன்னுடைய வீட்டை மீட்பாரா? இதில் ராதிகாவின் சூழ்ச்சி என்று பல திருப்பங்களுடன் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் எஸ்டிபி ரோசரியின் குடும்ப புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.அதாவது, இந்த சீரியலில் பாக்கியாவின் மாமனாராக ராமமூர்த்தி என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் எஸ்டிபி ரோசரி. இவர் சீரியலுக்கு வருவதற்கு முன்பு ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
எஸ்டிபி ரோசரியின் குடும்ப புகைப்படம்:
அது மட்டும் இல்லாமல் இவர் நாடக கலைஞரும் ஆவார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான வசூல் சக்கரவர்த்தி தொடரில் துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். 1993 ஆம் ஆண்டு இருந்து பல பாடங்களில் நடித்து இருக்கிறார். அதுவும் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான ராஜா மகன் அமைதிப்படை தோழர் பாண்டி வீரப்பதக்கம் என்று பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். மேலும், பொல்லாதவன், தொட்டி ஜெயா போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான சாந்தி நிலையம் வெற்றியை தொடர்ந்து இவர் பாலச்சந்தர் கையால் தன்னுடைய முதல் விருதை வாங்கி இருந்தார் தற்போது இவர் பாக்கியலட்சுமி சீரியலில் மட்டுமில்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையின் அப்பாவாகவும் நடித்து வருகிறார். சமீபத்தில் தனக்கு கிடைத்த விருதை தனது அம்மாவிடம் காட்டி அழகு பார்த்து இருக்கிறார்.