கோபி கல்யாணம் ஆகும் போது 23, ஆனா பாக்கியாவோட வயசு – சர்ச்சை கேள்விக்கு பாக்கியலட்சுமி சதீஷ் சொன்ன பதில்.

0
627
gopi
- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல் குறித்து மோசமாக ரசிகர் கேட்ட கேள்விக்கு கோபி சதீஷ் அளித்திருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், அவரின் கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள். இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா, வேலு லட்சுமணன், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
gopi

இந்த சீரியலை இயக்குநர் டேவிட் என்பவர் இயக்கி வருகிறார். மேலும், இல்லத்தரசிகளின் பேவரட் சீரியலாக பாக்கியலட்சுமி திகழ்கின்றது. இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் வீட்டில் உள்ள பெண்களுக்கு ஒரு உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது. பெண்கள் குடும்பத்தை பார்த்துக் கொண்டாலும் தனக்கு என்று ஒரு வேலை இருக்க வேண்டும்.

- Advertisement -

இதையும் பாருங்க : நீயெல்லாம் மனுஷனா, இந்த நிலைமை எந்த தந்தைக்கும் வரக்கூடாது – விஜய்யை திட்டி தீர்க்கும் ரசிகர்கள். இது தான் காரணம்.

பாக்கியலட்சுமி சீரியல்:

பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை உணர்த்துகிறது. தற்போது சீரியல் உச்ச கட்ட பரபரப்பில் எட்டி வருகிறது. அதாவது, கோபி வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் தெரிந்து விட்டது. இந்த நேரம் பார்த்து கோபி விபத்தில் சிக்கி கொள்கிறான். பின் கோபி ஹாஸ்பிட்டலில் இருக்கிறார். கோபி மருத்துவமனையில் இருப்பதை அறிந்து ராதிகா,பாக்கியா இருவரும் மருத்துவமனைக்கு வருகிறார்கள்.

-விளம்பரம்-
gopi

சீரியலின் கதை:

அப்போது ராதிகா, கோபியின் மருத்துவ செலவை பார்த்து கொள்கிறார். கோபி காதலிக்கும் நபர் ராதிகா என்ற உண்மை பாக்கியாவிற்கு தெரிய வருகிறது. இதனால் அதிர்ச்சியில் இருக்கிறார் பாக்கியா. இனி என்ன நடக்கும்? ராதிகாவுக்கு கோபியை விட்டு தருவாரா பாக்யா? இல்லை பாக்கியாவிற்கு ராதிகா விட்டுக்கொடுப்பாரா? என பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இதனால் ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ரசிகர் கேட்ட கேள்வி:

இந்த நிலையில் தற்போது சீரியல் குறித்து ரசிகர் கேட்ட கேள்விக்கு கோபியாக நடிக்கும் சதீஷ் கொடுத்து இருக்கும் விளக்கம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் பிடிக்காத பாக்கியா உடன் எப்படி மூன்று குழந்தை பெற்றீர்கள் என்று ரசிகர் கேட்டிருக்கிறார். அதற்கு சதீஷ் கூறியிருப்பது, திருமணம் ஆகும்போது கோபிக்கு வயது. பாக்யாவுக்கு என்ன வயது என்று ரைட்டர் சொல்லவில்லை. நான் ஏதாவது வயது சொல்லி சர்ச்சையில் சிக்க விரும்பவில்லை.

சதீஸ் கொடுத்த பதில்:

கோபிக்கு அந்த வயதில் உடல் தேவைகள் இருந்திருக்கும். அதனால் மூன்று குழந்தைகள் பெற்றிருக்கலாம் என நினைக்கிறேன். அதோடு இது ஒரு சீரியல், நான் நடிகர், கொடுத்த கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். அதனால் என்னை திட்டாதீர்கள் என்றும் கூறியிருக்கிறார். இப்படி கோபி சதீஸ் பேசியிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement