கோபியை போல பாக்கியாவிற்கும் திருமணமா ? கோபிக்கு தெரிஞ்சா என்ன ஆகும்.

0
1679
- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா திருமணம் குறித்த ப்ரோமோ தான் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவியில் தற்போது டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் சீரியலில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார்.

-விளம்பரம்-

இவரை அடுத்து இந்த தொடரில் சதீஸ், ரேஷ்மா, நேகா, விஷால் என பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு முன் உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது. தற்போது சீரியலில் இனியா-பாக்கியா கல்லூரி ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது. இனியாவிற்கு மீடியா சம்பந்தப்பட்ட படிப்பு படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

ஆனால், கோபி அவரை பிசினஸ் சம்பந்தப்பட்ட படிப்பு படிக்க வேண்டும் என்று சொல்கிறார். பின் ஒருவழியாக போராடி இனியாவை அவர் விருப்பப்படி கல்லூரியில் சேர்த்து விடுகிறார்கள். பாக்யா கல்லுரியில் படிக்க ஆசைப்படுகிறார். அதற்கு எழில் உதவி செய்கிறார். பின் இதை வீட்டில் உள்ள எல்லோரிடமும் பாக்கியம் சொல்கிறார். இதனால் அனைவரும் பாக்கியா படிக்க சம்மதம் சொல்கிறார்கள். ஆனால், இனியாவிற்கு மட்டும் இதில் விருப்பமில்லை. இதை அவர் கோபியிடம் சொல்ல வழக்கம்போல் கோபி புலம்புகிறார்.

பாக்கியாவின் கனவு:

தற்போது சீரியலில் பாக்கியா ஆசைப்பட்ட மாதிரி கல்லூரிக்கு செல்கிறார். மேலும், கல்லூரிக்கு செல்வதற்கு எப்படியோ தன்னுடைய மாமியார் ஈஸ்வரியையும் சம்மதிக்க வைக்கிறார். இன்னொரு பக்கம் கேண்டினை அமிர்தா பார்த்துக் கொள்கிறார். ஜெனிக்கு வளைகாப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் வீட்டில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் கோபி ,பாக்கியா கல்லூரிக்கு செல்வதை குறித்து ராதிகாவிடமும் அவருடைய நண்பரிடமும் பேசி புலம்பி கொண்டிருக்கிறார். எப்படியாவது இதை நிறுத்த வேண்டும் என்றும் முயற்சி செய்கிறார்.

-விளம்பரம்-

சீரியல் குறித்த ப்ரோமோ :

ஆனால், கோபியின் எண்ணம் நிறைவேறவில்லை. அதோ இனியாவிற்கு தன்னுடைய அம்மா பாக்யா கல்லூரிக்கு வருவது பிடிக்கவில்லை. இதனால் அவர் பாக்யாவிடம் சரியாக பேசாமல் கோபப்படுகிறார். ஆக மொத்தம் பாக்கியா கல்லூரி, கேன்டீன், குடும்பம் என்று ஒரு ஆல் ரவுண்டராக கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ குறித்த வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில், பழனிச்சாமியின் அம்மா பாக்யாவை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்.

பழனிசாமி -பாக்கியா திருமணம்:

இது குறித்து பழனிச்சாமிடம் கேட்கிறார். அதற்கு பழனிச்சாமி அதெல்லாம் வேண்டாம். நாங்கள் இருவரும் நல்ல நட்பாக தான் பழகிக் கொண்டிருக்கிறோம் என்னிடம் திருமணத்தைப் பற்றி பேசாதீர்கள் என்று சொல்கிறார். இனிவரும் காலங்களில் பாக்கியலட்சுமி – பழனிசாமி இருவருக்கும் திருமணம் நடைபெறுமா? கோபி ஏதாவது சதி செய்வாரா? கோபியின் அம்மா அப்பா இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொள்வார்களா? போன்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் செல்ல இருக்கின்றது.

Advertisement