முதல் நாள் ஷூட்டிங்கின் போது எடுத்த வீடியோவை பகிர்ந்து நன்றி தெரிவித்த ஜெயிலரின் மருமகள்.

0
2093
Jailer
- Advertisement -

ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகள் ரசிகர்களுக்கு நன்றி சொல்லி இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே ஜெயிலர் படம் குறித்த செய்திகள் தான். தமிழ் சினிமா உலகில் அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் பிளாக் பஸ்டர் ஹிட் தான். அந்த வகையில் தற்போது இவர் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தை நெல்சன் இயக்கி இருக்கிறார். கடைசியாக இவர் விஜய் வைத்து பீஸ்ட் படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் தோல்வி அடைந்தது. இருந்தாலும் முயற்சியை கைவிடாமல் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை எடுத்திருக்கிறார். இந்த திரைப்படம் கடந்த 10 ஆம் தேதி தான் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், ஸ்வேதா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

ஜெயிலர் படம்:

மேலும், பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் ஜெயிலர் திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. இந்த படம் திரையரங்களில் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கு யூடுயூப் விமர்சகர்களும், பிரபலங்கள், ரசிகர்கள் என எல்லோருமே பாசிட்டிவான கமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள். இந்த படத்தின் மூலம் நெல்சன் மீண்டும் கம்பேக் கொடுத்து இருக்கிறார். மேலும், இந்த படம் இதுவரை உலக அளவில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

படம் குறித்த தகவல்:

அதோடு சமீபத்தில் வெளியான அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை ஜெயிலர் படம் முறியடித்து இருக்கிறது. அதற்கு காரணம், இந்த படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் கனகச்சிதமாக இயக்குனர் நெல்சன் தேர்ந்தெடுத்து இருக்கிறார். இந்தப் படத்திற்காக நெல்சன் மெனக்கட்டிருப்பதை குறித்து பலருமே பாராட்டி இருந்தார்கள். அதோடு இந்த படத்தின் வெற்றிக்கு அனிருத் பாடல்களும் ஒரு முக்கிய காரணம்.

-விளம்பரம்-

படத்தில் ரஜினியின் மருமகள்:

மேலும், இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களின் கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படத்தில் ரஜினியின் மருமகளாக ஸ்வேதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் மிர்ணா. இவர் மலையாள மொழியில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். ஜெயிலர் படத்தின் மூலம் தான் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமாகி இருக்கிறார்.

மிர்ணா பதிவு:

மேலும், ஜெயிலர் படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருப்பதால் மிர்ணாவுக்கு தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வர தொடங்கி இருக்கிறது.அதுமட்டுமில்லாமல் இவர் சோசியல் மீடியாவிலும் படு அக்டிவாக இருக்கிறார். இவர் தான் அடிக்கடி எடுக்கும் போட்டோ சூட் புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இந்த நிலையில் மிர்ணா அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு ரசிகர்களுக்கும், ஜெயிலர் பட குழுவினருக்கும் நன்றி தெரிவித்து பதிவு போட்டிருக்கிறார்.

Advertisement