ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்யலட்சிமி சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சிரியலில் கதாபத்திரங்களாக நடிக்கும் நடிகர்கள் அனைவருமே பிரமாதமாக தங்களின் நடிப்பை வெளிபடுத்தி வருகின்றனர். அப்படி அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ரித்திகா. இவர் இன்ஸ்டாகிராமில் 1 மில்லியனுக்கும் மேலாக பின் தொடர்பவர்களை வைத்து செலிபிரிட்டியாக சின்னத்திரையில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தனது தொடக்க காலத்தில் குடும்ப கஷ்டத்தால் நடிக்க வந்த நடிகை ரித்திகா “ராஜா ராணி” என்ற சீரியலின் மூலம் சின்னத்திரையுல் அறிமுகமாக்கினார். அதன் பின்னர் சிவா மனசுல சக்தி, சாக்கோலேட், திருமகள் என்று 2018ஆம் ஆண்டில் இருந்து நடித்து வந்த ரித்திகா தற்போது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்யலட்சிமி என்ற சிரியலில் மூலம் தான் ரித்திகா பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.
அதுமட்டுமில்லாமல் தொகுப்பாளினி, நடனம், பாடகர், ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் குக்கிங் ஷோ என கலக்கிவரும் ரித்திகா 4ஜி என்ற குறும்படத்தில் நடித்திருக்கிறார்.அதுமட்டுமில்லாமல் தனியாக ஒரு யூடுயூப் சேனலையின் நடத்திவரும் நடிகை ரித்திகா அதில் தனது அன்றாட வாழ்கை, தன்னுடைய கடந்த கால வாழ்க்கை மற்றும் நடிக்கும் சீரியல் மாற்றிய தகவல்களை பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் ரித்திகாவிற்கு கூடிய விரைவில் திருமணமாக இருக்கிறதுஎன்று சமூக வலைதளத்தில் செய்திகள் பரவியது. இதனை தொடர்ந்துதான் தனக்கு திருமணம் அகவிருக்கிறது என்று சோஷியல் மீடியாவில் தெரிவித்திருந்தார் நடிகை ரித்திகா.மேலும் ரித்திகா விஜய் டிவியில் பணியாற்றி வரும் வினு என்பவரைதான் திருமணம் செய்துலொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியானது.
ரித்திகா திருமணம் செய்யவிருக்கும் வினு என்பவர் கிரியேட்டிவ் டைரக்டர் ஆக பணியாற்றி வருகிறாராம். இருவரும் விஜய் டிவியில் பணியாற்றி வருவதால் இருவரும் காதலித்து வந்த பின்னர்தான் திருமணம் செய்துகொள்ள விருக்கின்றனர் என்று கூறப்பட்டது. மேலும் நவம்பர் மாதம் 27ஆம் தேதி மாலை இவர்களது இருவரின் குடுப்பதினார் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணமாம் நடைபெற்றது.
விஜய் டிவியில் கிரியேட்டிவ் டைரக்டராக வேலை பார்த்து வரும் வினு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் அவரது வரவேற்பு சென்னையில் வைத்து மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் ரித்திகா கர்ப்பமாக இருப்பதாகவும் இதனால் அவர் பாக்கியலட்சுமி தொடரிலிருந்து வெளியேற இருப்பதாகவும் தகவல் வெளியானது. இப்படி ஒரு நிலையில் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை புகைப்படத்தின் மூலம் உறுதி செய்து இருக்கிறது.