மீடு விவகாரம் குறித்து நடிகை சௌகார் ஜானகி அளித்திருந்த பேட்டி வீடியோவை விமர்சித்து பாடகி சின்மயி போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு மீடு பிரச்சினை இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இதை பலர் வெளிப்படையாக சொன்னாலும், வெளியில் சொன்னால் அவமானம் என்று சிலர் தெரிவிக்காமல் இருக்கிறார்கள்.
இது சினிமாவில் மட்டும் இல்லாமல் சாதாரண பெண்களுக்கும் இந்த கொடுமை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதிலும் கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து இந்த பிரச்சனை அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்த மீ டூ என்ற வார்த்தை சமூக செயற்பாட்டாளரான தரானா புர்கே என்ற கருப்பின பெண்ணால் தான் பயன்படுத்தப்பட்டது. அதற்குப்பின் தான் மீ டூ இயக்கம் தொடங்கப்பட்டது. இதில் சினிமா, விளையாட்டு, தொழில் துறை போன்ற பல்வேறு பிரிவுகளில் வேலை செய்யும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லைகளை குறித்து பேசப்படுகிறது.
மீடூ விவகாரம்:
பின் இந்த இயக்கம் இந்தியாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு தான் மக்கள் மத்தியில் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா, நானா படேகர் ஆகியோர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை குறித்து வெளிப்படையாக கூறியிருந்தார்கள். அதற்குப் பிறகுதான் பலரும் மீடுவில் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை கூறினார்கள். அதிலும் பாடகி சின்மயி வைரமுத்துவின் மீது அடுக்கடுக்காக மீடு குற்றச்சாட்டை வைத்திருந்தார். பெண்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த இயக்கம் பெண்களுக்கே எதிராக ஒரு கட்டத்தில் மாறிவிட்டது.
நடிகை சௌகார் ஜானகி வீடியோ:
இந்த நிலையில் மீடு விவகாரம் குறித்து பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி பேசியிருக்கும் பழைய வீடியோ தான் தற்போது இணையத்தில் வரலாகி வருகிறது. அதாவது, நடிகர் ஒய் ஜி மகேந்திரன் உடன் சௌகார் சானகி பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர், சமீப காலமாக என்னை அதிகம் தொந்தரவு செய்த ஒரு விஷயம் மீடு. விளம்பரத்திற்காக இப்படி ஒரு கீழ்த்தரமான விஷயத்தை ஏன் செய்ய வேண்டும்? என்னைக்கோ நடந்தது, நடக்காதது, நடக்க வேண்டியது என நீ ஒதுக்கிவிட்டு இன்னைக்கு நீ வேற மாதிரி போனது.
மீடு குறித்து சொன்னது:
அன்னைக்கு நீ ஓகே சொல்லி உனக்கு சூட் ஆன பின் வாய மூடிட்டு இருந்த, இன்னைக்கு எங்கேயோ ஹாலிவுட் சொன்னாங்க, பாலிவுட்டில் சொன்னாங்கன்னு நீயும் வந்து சொன்னால் அது கேவலம். நீ அப்படி சொல்வது உன் குடும்பத்தை, உன் கணவனை, உன் குழந்தைகளை தான் புண்படுத்தும். இலை மறைவாக காய் மறைவாய் இருந்தால் தான் வாழ்க்கை. இந்த மீடு பிசினஸ் வந்ததுக்கு பிறகு நான் தொலைக்காட்சி பார்ப்பதையே நிறுத்தி விட்டேன். இப்படி சொல்வதன் மூலமாக நீ எதை நிரூபிக்க நினைக்கிறாய்? உன் பின்னாடி ஒருத்தன் வந்தான் கையைப் பிடிச்சு இழுத்தான்னு சொன்னால் நாளைக்கு உனக்கு என்ன மரியாதை இருக்கு.
சின்மயி பதிவு:
நான் பெண்களுக்காக போராடுகிறவள். ஆனால், 20 வருஷத்துக்கு முன்னாடி நடந்ததை இப்போ வந்து சொன்னால் அதை எல்லாம் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று பேசி இருந்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பாடகி சின்மயி, பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளியாக்குவதை தான் இந்த வீடியோவில் சௌகார் ஜானகி, ஒய் ஜி மகேந்திரன் செய்கிறார்கள். பெண்ணை பற்றி பாடம் எடுக்க அரைவேக்காடுகள் இந்த வீடியோவை தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை என்று கூறியிருக்கிறார்.