மூன்று மத முறைப்படி நடந்துள்ள பப்லுவின் முதல் திருமணம் – விக்ரம், பிரகாஷ் ராஜ் எல்லாம் எப்படி இருக்காங்க பாருங்களேன்.

0
539
babloo
- Advertisement -

நடிகர் பப்லு இரண்டாம் திருமணம் செய்யப்போவதாக வெளியான தகவலை தொடர்ந்து அவர் மீது பல விமர்சனங்கள் எழுநது வரும் நிலையில் அவரின் முதல் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் பிரித்திவிராஜ். இவரை எல்லோரும் பப்லு என்று தான் அழைப்பார்கள். தற்போது இவருக்கு 55 வயதாகிறது. தமிழ் சினிமா உலகில் ஜாம்பவானாக திகழ்ந்த நடிகர் எம் ஜி ஆர், சிவாஜி கணேசன் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பிரிதிவிராஜ்.

-விளம்பரம்-

இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் இதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்.இவர் சின்னத்திரை தொடர்களில் வில்லனாகவும், துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் கண்ணான கண்ணே தொடரில் கதாநாயகிக்கு அப்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

பப்லு இரண்டாம் திருமணம் :

இவர் என்ன தான் படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் ரியல் லைப்பில் இவர் உண்மையான ஹீரோ தான். இவருக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு மகன் உள்ளார். இவருடைய மகனின் பெயர் அகத். இந்நிலையில் நடிகர் பப்லுவிற்கு இரண்டாவது திருமணம் ஆகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள பப்லு தான் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணிற்கு 23 வயது இல்லை அவருக்கு 24 வயது ஆகிறது என்று கூறி இருக்கிறார்.

இரண்டாம் திருமணம் குறித்து பேசிய பப்லு :

மேலும், அவர் மலேசியாவை சேர்ந்த பெண் இல்லை அவர் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த தெலுங்கு பெண் என்றும் கூறியுள்ளார். மேலும், எங்களுடைய விஷயம் அவரது குடும்பத்திற்கு தெரியும், அவர்களும் அதற்கு சம்மதித்து விட்டார்கள். ஒரு வருடமாக தான் எங்கள் இருவருக்கும் பழக்கம். எனக்கு 56 வயதாகிறது அவருக்கு 24 வயது தான். எனவே, அவர் யோசிக்க நேரம் வேண்டும் என்பதால் இன்னும் நாங்கள் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை.

-விளம்பரம்-

விமர்சனங்களுக்கு பதிலடி :

ஆனால், அவரும் எங்கள் திருமணத்தில் உறுதியாக இருக்கிறார் என்று கூறி இருக்கிறார். மேலும், தன் வருங்கால மனைவியுடன் இணைந்து தொடர்ந்து பல பேட்டிகளை கொடுத்து வருகிறார் பப்லு. அந்த வகையில் சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது கமெண்டில் வந்த சில விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். அதில் ஒரு கமெண்டில் பொம்பள சுகம் கேக்குதா என்ற கமென்டிற்கு ‘ஆம் கேக்குது’ என்று பதில் அளித்துள்ளார்.

முதல் மனைவி குறித்து பப்லு :

மேலும், தன் முதல் மனைவி குறித்து பேசிய பப்லு ‘எனக்கு இவங்க நிறைய மரியாதை நிறைய காதல் மற்றும் சுகத்தை எனக்கு கொடுக்கிறாள் இதையெல்லாம் என் முதல் மனைவி கொடுக்கவில்லை அவங்க என்னை சரியாக கையாண்டிருந்தால் நான் வெளியில் சாப்பிட்டு இருக்க மாட்டேன் அவங்க நிச்சயம் இதை நல்லபடியாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை’ என்று கூறி இருந்தார்.

முதல் திருமண புகைப்படங்கள் :

இப்படி ஒரு நிலையில் நடிகர் பப்லுவின் முதல் திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. பப்லுவின் முதல் திருமணம் இந்து, கிறிஸ்டின், புத்திஸ்ட் என்று மூன்று முறைப்படி நடைபெற்று இருக்கிறது. மேலும், பப்லுவின் திருமணத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ், தாமு, விக்ரம், கே பாலசந்தர் என்று பல பிரபலங்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Advertisement