தமிழ் சினிமாவில் 1955ஆம் ஆண்டுகளில் டி ஆர் ராமண்ணா இயக்கத்தில் எம்.ஜி.ஆர், டி.ஆர் ராஜகுமாரி, ராஜ சுலோச்சனா, ஜி வரலட்சிமி, சந்திர பாபு என பல நடிகர்கள் நடித்த திரைப்படம் தான் குலேபகாவலி. 1955ஆம் ஆண்டில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்திற்கு மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ் விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி இருவரும் இசைமைத்தனர்.
குலேபகாவலி :
இப்படத்தில் மிகவும் பிரபலமான பாடல் என்றால் அது ஜக்கி பாடிய “நா சொக்காப் போட்ட நவாபு” என்ற பாடல். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த நிலையில் இப்படலுக்கு பின்னல் இருக்கும் கதை யாரும் அறியாத ஓன்று. 40ஸ் காலங்களில் எம் எஸ் விஸ்வநாதன் பல இசையமைப்பாளர்களுக்கு உதவியாளராக இருந்தார். கோவை சென்ட்ரல் ஸ்டுடியோஸில் எஸ்.என் சுப்பையா நாயுடுவிடம் உதவியாளராக இருந்தவர் எம்.எஸ்.வி. இந்த கதை குலேபகாவலி படம் வெளியாவதற்கு 10 வருடங்களுக்கு முன்னர் நடந்தது.
உண்மையை கூறிய எம்.எஸ் நாயுடு :
எஸ்.என் சுப்பையா நாயுடுவின் பல பாடல்களுக்கு எம்.எஸ்.விதான் இசையமைத்து கொடுப்பார். ஆனால் எம் எஸ் விதான் தன்னுடைய பாடலுக்கு டியூன் போட்டு கொடுக்கிறார் என்று அவர் யாரிடமும் சொல்லவில்லை. சென்ட்ரல் ஸ்டுடியோஸ் தன்னுடைய ஒப்பந்தகாரர்களை வெளியேற்றிய போது அவர்களுடன் எஸ்.என் நாயுடுவும் வெளியேறினார். ஆனால் குற்றவுணர்வின் காரணமாக தன்னுடைய பாடல்களுக்கு டியூன் போட்டு கொடுத்தது எம்.எஸ்.விதான் என்று சென்ட்ரல் ஸ்டுடியோவிடம் கூறியுள்ளார்.
அசிங்க படுத்திய எம்.எஸ்.வி :
எம்.எஸ்.வி, எம்.எஸ் நாயுடுவிடம் உதவியாளராக இருக்கும் போது ஒரு இளைஞரை அழைத்து வந்து இவர் பாடுவேன் என்கிறான் இவனது குரலை பரிசோதித்து கூறு என சொல்ல. எம்.எஸ்.வியும் அவரை பாடச்சொல்லி கேட்டிருக்கிறார். பின்னர் எம்.எஸ். நாயுடு வந்ததும் இவர் நன்றாக பாடுகிறாரா? என கேட்க. எங்கே பாடுகிறான் வசனத்தை அப்படியே சொல்கிறான் என்று கூறியுள்ளார். இதனால் அந்த இளைஞன் வெளியேறும் போது எம்.எஸ்.வியை முறைத்தபடியே சென்றிருக்கிறார். அந்த இளைஞன் தான் நடிகர் சந்திரபாபு.
பழிவாங்கிய சந்திரபாபு :
பின்னர் காலங்கள் உருண்டோடா எம்.எஸ்.வி பிரபல இசையமைப்பாளராகவும், சந்திர பாபு பிரபலமான நடிகராகவும் மாறிவிடுகின்றனர். இந்த நிலையில் தான் சந்திரபாபு குலேபகாவலி படத்துடன் சேர்ந்து நடிக்கிறார். அப்போது ஒரு பாடலுக்கு டியூன் போட்டு எம்.எஸ்.வி நடிகர் சந்திரபாபுவிடம் எப்படி இருக்கிறது என கேட்க அவர் இதெல்லாம் ஒரு டியூனா? இதற்கு எப்படி ஆடுவது என கூறியுள்ளார். இதற்கடுத்து எம்.எஸ் வி ஆடிக்காட்ட குஷியான சந்திரபாபுவும் எம்.எஸ் விஸ்வநாதனும் நன்பர்களாக மாறி விடுகின்றனர்.
முன்பு இருந்த கோவத்தை கருத்தில் கொண்டு நடந்த இந்த நிகழ்வில் உருவான பாடல் தான் “நா சொக்கா போட்ட நவாபு” என்ற பாடல். இப்பாடல் அந்த காலங்களில் மிகவும் பிரபலமாகவே இருந்தது. அதற்கு பிறகு பல அற்புதமான பாடல்களுக்கு இசையமைத்த இவருக்கும், நடிகர் சந்திரபாபுவிற்கு திறமைக்கேற்ற அங்கிகாரம் இல்லை என்பது மிக வருத்தமான விஷியம் தான்.