திருமணமாகி சில ஆண்டுகளில் பிரிந்த கணவர் – சிங்கள் Mom ஆக மகன்களை காப்பாற்றி வரும் ரேஷ்மா. இவருக்கு இவ்ளோ பேசிய மகனா.

0
265
- Advertisement -

“புஷ்பா புருஷன்” என்ற டயலாக் மூலம் மக்களிடையே பிரபலம் ஆனவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. சமீபத்தில் நடிகை ரேஷ்மா அவர்கள் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள புகைப் படத்தை பார்த்து ரசிகர்கள் பல கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் இவரை தான் ரேஷ்மா அவர்கள் தற்போது மூன்றாவது திருமணம் செய்து கொள்ள உள்ளாரா? என்றும், அதற்காக தான் அவருடைய புகைப் படத்தை போட்டு உள்ளார் என்றும் கூறி உள்ளார்கள். இது தொடர்பாக இணையங்களில் பல சர்ச்சைகள் எழுந்து உள்ளது. மேலும், இவர் ஒரு விமான பணிப் பெண்ணாக பணி புரிந்து உள்ளார்.

-விளம்பரம்-

இதற்கு பிறகு தான் நடிகை ரேஷ்மா அவர்கள் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக தான் முதலில் அறிமுகமானர். அதற்குப் பின்னர் அவர் சன் தொலைக் காட்சியில் பிரபலமான தொடர்களில் ஒன்றான “வம்சம்” என்ற தொடரின் மூலம் சின்ன திரையில் நடிக்க தொடங்கினார். இதனை தொடர்ந்து படங்களில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது. இவருடைய தந்தை பிரசாத் பசுபுலேட்டி அவர்கள் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.

- Advertisement -

மேலும், இவர் தயாரித்த “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்துகொண்டு இருந்தார்.

ரேஷ்மா பிக் பாஸ் வீட்டில் இருந்த போது கடந்து வந்த பாதை டாஸ்க்கில் தன் திருமண வாழ்க்கை குறித்து பேசி இருந்தார். அதில் ‘நான் 9 மாதம் கர்ப்பமாக இருந்ததேன். அப்போது மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த போது என் வயிற்றில் இருந்த குழந்தையின் இதய துடிப்பு நின்று இறந்து விட்டது என்று மருத்துவர்கள் கூறினார்கள். அந்த இழப்பு என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்’ என்று கண்ணீர் விட்டு கதறியபடி ரேஷ்மா கூற சக போட்டியாளர்கள் அனைவருமே கண்ணீர் விட்டு அழுது விட்டனர்.

-விளம்பரம்-

மேலும், நடிகை ரேஷ்மாவின் முதல் திருமணம் பெற்றோர்கள் பார்த்து அவர்கள் சம்மதத்துடன் நன்றாக கோலாகலமாக நடைபெற்ற திருமணம் ஆகும். ஆனால், சில வருடங்களிலேயே இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இவர்கள் இருவரும் பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். பின்னர் சில காலங்களில் இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதற்கு பின்னர் இவர் தன் கணவருடன் அமெரிக்காவிலேயே தங்கி விட்டார்.

பின் இரண்டாவது திருமணத்திலும் இவருக்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டது. அதனால் அவருடனும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். மேலும், இவர் டைரக்டர் நிஷாந்த் ரவீந்திரனை திருமணம் செய்யப்பவதாக கூட வதந்திகள் எழுந்தது. ஆனால்,, தற்போது தனியாக தான் தன் மகன்களை பார்த்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் ரேஷ்மா தனது மகனின் லேட்டஸ்ட் புகைபடங்களை வெளியிட்டு இருக்கிறார்.

Advertisement