உண்மை சம்பத்தை எடுக்க ராமநாதபுரத்தில் காத்திருக்கும் பாலா.! அடுத்த மூவ் இதானாம்.!

0
908
Adithya-Varma
- Advertisement -

தெலுங்கில் சூப்பர் ஹிட் அடைந்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் எடுக்கப்பட்டது. விக்ரம் மகன் துருவ் நடிப்பில் வெளியாக இருந்த இந்த படம் பாலா இயக்க இ4 நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும், கடந்த 14 ஆம் தேதி இந்த படம் வெளியாவதாக இருந்தது.

-விளம்பரம்-

ஆனால், படத்தின் இறுதி ரிசல்ட் திருத்திகாரமாக இல்லை என்றும் படத்தில் சில மாற்றங்களை செய்ய பாலா மறுத்துவிட்டார் அதனால் படத்தை வெளியிடபோவது இல்லை என்று இ4 நிறுவனம் அறிவித்தது. தற்போது இந்த படம் வேறு ஒருவர் இயக்கத்தில் ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் தயாராக இருக்கிறது.

- Advertisement -

இதையும் படியுங்க : வர்மா படத்தில் இருந்த ரைசா ஆதித்யா வர்மாவின் இல்லை.! அவருக்கு பதில் இவர் தான்.! 

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான பாலாவிற்கு இது மிகவும் ஒரு கௌரவ இழுக்காக அமைந்தது. அதே போல வர்மா பட விவகாரத்தில் விக்ரமுக்கும் பாலாவிற்கும் கூட சில மன சங்கடங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

-விளம்பரம்-

ஆனால், வர்மா படம் வெளியாவதற்குள் ஒரு படத்தை எடுத்து முடித்துவிட வேண்டும் என்று சபதம் எடுத்துள்ளாராம் பாலா.
பாலாவின் அடுத்த படம் அரசியல் படமாக இருக்கும் என பாலாவுக்கு நெருக்கமான  வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது. இதற்காக தற்போது ராமநாதபுரத்தில் இருக்கிறாராம் பாலா.

இந்நிலையில் சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாலாவும் கலந்து கொண்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்,
நான் இயக்கும் புதுப்படத்தில் இது போன்றக் காட்சிகள் இடம்பெறுகின்றன. அதனால் இந்தக் கூட்டங்கள் எப்படி நடைபெறுகின்றன என்பதைத் தெரிந்துகொள்வதற்காக இங்கு வந்தேன் என்று கூறியுள்ளார்.

Advertisement