உண்மை சம்பவத்தை கொண்டு வெளிவந்த ‘ஃபயர்’ படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

0
142
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகராக பாலாஜி முருகதாஸ் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பயர். இந்த படத்தை ஜேஎஸ்கே என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம்தான் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் ரக்ஷிதா மகாலட்சுமி, சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், ஜேஎஸ்கே, சிங்கம்புலி, சுரேஷ் சக்கரவர்த்தி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு டிகே இசையமைத்திருக்கிறார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

தமிழகத்தை உலுக்கிய உண்மை சம்பவத்தை தான் இந்த படத்தில் காண்பித்து இருக்கிறார்கள். காசி என்ற ஒரு டாக்டர் பல பெண்களுடைய வாழ்க்கையில் விளையாடி இருக்கிறார். அந்த காசி கதாபாத்திரத்தில் தான் பாலாஜி முருகதாஸ் நடித்திருக்கிறார். படத்தில் பிசியோதெரபி ஆக இருக்கும் பாலாஜியை காணவில்லை என்று அவருடைய பெற்றோர்கள் போலீசில் புகார் அளிக்கிறார்கள். பின் தீவிரமாக போலீசும் அந்த வழக்கை விசாரிக்கிறார்கள். அப்போதுதான் விசாரணையில் நான்கு பெண்களை பற்றிய விவரம் தெரிய வருகிறது.

- Advertisement -

பாலாஜி அந்த பெண்களுடன் நெருக்கமாக இருந்து அதை வீடியோவாக எடுத்து மிரட்டி பணம் வாங்கி இருக்கிறார். இந்த அதுமட்டுமில்லாமல் நிறைய பெண்கள் பாலாஜியால் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் பாலாஜி முருகதாஸை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என்று அமைச்சரும் அழுத்தம் கொடுக்கிறார்? அதற்குப் பிறகு என்ன நடந்தது? குற்றவாளியை போலீஸ் கண்டுபிடித்தார்களா? பாலாஜியின் நிலை என்ன? என்பதுதான் படத்தின் உடைய மீதி கதை.

படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் பாலாஜி முருகதாஸ் நடித்திருந்தாலும் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக முடித்து இருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண்கள் கதாபாத்திரத்தில் ரக்ஷிதா, சாந்தினி, சாக்ஷி அகர்வால், காயத்ரி சான் நடித்திருக்கிறார்கள். இவர்கள் இதுவரை இல்லாத அளவிற்கு தாராளமாக கவர்ச்சி காட்டியிருக்கிறார்கள். இவர்களை அடுத்து படத்தில் வரும் சுரேஷ் சக்கரவர்த்தி, ஜேஎஸ்கே, சிங்கம்புலி ஆகியோரும் தங்கள் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இயக்குனர் இந்த படத்தை கொடுத்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. அதுமட்டுமில்லாமல் முகமுடியுடன் வாழும் காசி போன்றவர்களுடைய முகத்திரையை இந்த படம் கிழித்தெடுத்திருக்கிறது. படத்திற்கு பின்னணி இசை நன்றாக இருக்கிறது. ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்கிறது. மொத்தத்தில் ரொம்ப சுமாரான படமாக இருக்கிறது.

நிறை:

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை

பாலாஜி முருகதாஸின் நடிப்பு சிறப்பு.

பின்னணி இசை ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது.

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்

சமூக விழிப்புணர்வு கதை

குறை:

குடும்பத்தோடு இந்த படத்தை பார்ப்பது கொஞ்சம் கஷ்டம்

சில கதாபாத்திரங்கள் அழுத்தமாக சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும்

கதாநாயகிகள் எல்லை மீறி கவர்ச்சி காட்டி இருக்கிறார்கள்

பாடல்கள் பெரிதாக கவரவில்லை

இரண்டாம் பாதி சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது

மொத்தத்தில் ஃபயர் – அனல் குறைவு

Advertisement