கார் பள்ளத்துல சிக்கிடுச்சா இவர கூப்புடுங்க – கேலிக்கு உள்ளான பாலகிருஷ்ணா பட காட்சி.

0
560
- Advertisement -

தெலுங்கு சினிமாவில் பல ஆண்டு காலமாக மிகப் பிரபலமான நடிகராக கொடிகட்டி பறப்பவர் நந்தமூரி பாலகிருஷ்ணா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் ஆரசியல்வாதியும் ஆவார். ஆந்திராவில் முதலமைச்சராக இருந்த என் டி ராமாராவ் அவர்களின் ஆறாவது மகன் தான் நந்தமூரி பாலகிருஷ்ணா. இவர் குழந்தை நட்சத்திரமாக தாத்தம்மா கலா என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு இவர் ஆந்திர சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து இருக்கிறார். வயதானாலும் பாலகிருஷ்ணா அவர்கள் இன்னும் படங்களில் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார். அதிலும் அதிரடி, ஆக்ஷன் போன்ற படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் பாலகிருஷ்ணா.

- Advertisement -

வீர சிம்ஹா ரெட்டி படம் :

இந்த நிலையில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் இயக்குனர் கோபிசந்த் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்த வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் இன்று தெலுங்கு சினிமாவில் வெளியானது. இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் வரலட்சிமி சரத்குமார், ஹனி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு வாரிசு இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருந்தார்.

ட்ரைலர் :

இப்படி பட்ட நிலையில் இப்படத்தின் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த நிலையில் இப்படம் இன்று வெளியாகியது. மேலும் இதே நாளில் சிரஞ்சீவி நடித்திருந்த “வால்டர் வீரய்யா” திரைப்படமும் ஒன்றாக வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் எந்த படம் வெற்றியடைய போக்கியது என்ற எதிர்பார்ப்பு நிலவியது. வீர வீர சிம்ஹா ரெட்டி திரைப்பாடல் பழைய படங்களை போல எதிரிகளை எறும்புகளை போல தூக்கி வீசி ரசிகர்களை கவர்த்திருந்தார்.

-விளம்பரம்-

கலாய்க்கும் நெட்டிசன்கள் :

இந்நிலையில் தான் வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. படத்தில் எப்போதும் போல மாஸ் என்ட்ரி கொடுத்து வந்த பாலகிருஷ்ணா. ஒரு காட்சியில் காரை காலால் நகர்த்திடும் வீடியோ ஓன்று சோசியல் மீடியாவை வைரலாகியது. இதனை பலரும் கிண்டல் கேலி செய்து கலாய்த்து வருகின்றனர். இது முதல் முறை கிடையாது பல படங்களில் லாஜிக் என்றால் என்ன என்று கேட்க்கும் அளவிற்கு ரயிலை வார்த்தயால் நகர்த்துவது, ஹாலிஹாப்டர் போல அந்தரத்தில் பறந்து எதிரிகளை தொம்சம் செய்வது என இருந்து வரும் பாலையா இப்படத்திலும் தான் யார் என்பதை ரசிகர்களுக்கு காட்டியுள்ளார்.

Advertisement