என்னது, வெண்பா – பாரதி திருமணம் முடிந்துவிட்டதா ? வெளியான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.

0
606
- Advertisement -

வெண்பா – பாரதியின் திருமண ரிசப்ஷன் சூட்டிங் ஸ்பாட் வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

மேலும், இந்த தொடரில் பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார். முதலில் கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்தார். சமீபத்தில் தான் ரோஷினி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு காரணமாக சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார். பின் கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். வினுஷா தேவி பார்ப்பதற்கு அச்சு அசலாக ரோஷினி போல் இருப்பதால் சீரியல் நன்றாக தான் சென்று கொண்டு இருக்கிறது. இதற்கு இடையில் சீரியலில் இருந்து அஞ்சலி ரோலில் நடித்த கண்மணி, பாரதியின் தம்பி அகிலன் ஆகியோர் விலகி இருந்தார்கள்.

- Advertisement -

பாரதி கண்ணம்மா சீரியல்:

இப்படி சீரியலில் முக்கிய ரோலில் நடித்த நடிகர்கள் பலர் மாற்றங்கள் செய்தாலும் டி ஆர் பி ரேட்டிங்கில் இந்த சீரியல் முன்னிலையில் தான் வகித்து வருகிறது. மேலும், சில மாதங்களாகவே சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. சீரியலில் வெண்பா கர்பம் ஆகிறார். இவருடைய கர்ப்பத்திற்கு காரணம் ரோகித் தான் என்பது வெண்பாவிற்கு தெரியும். ஆனால், அந்த உண்மையை மறைத்து எப்படியாவது பாரதியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வெண்பா ஒரு திட்டம் தீட்டம் போடுகிறார். அனைவரும் எதிர்பார்த்த மாதிரி பாரதி டி என் ஏ டெஸ்ட்டை எடுக்கிறார். வெண்பாவிற்கு திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

சீரியலின் கதை:

ஆனால், வெண்பா யாருக்கும் தெரியாமல் திருமண மண்டபத்தில் இருந்து தப்பித்து கோயிலுக்கு செல்கிறார். பின் வெண்பா காணவில்லை என்றவுடன் அதிர்ச்சியில் மொத்த குடும்பமே நிற்கிறது. வெண்பா இருக்கும் இடத்தை கண்ணம்மா தெரிந்து கொள்கிறார். இதனால் எல்லோரும் கோவிலுக்கு செல்கிறார்கள். கோயிலில் வெண்பா, பாரதியை வலுக்கட்டாயமாக தாலி கட்ட சொல்கிறார். கடைசி நிமிடத்தில் கண்ணம்மா கல்யாணத்தை தடுத்து நிறுத்தி பாரதி இடம் சண்டை போடுகிறார்.

-விளம்பரம்-

வெண்பா உண்மை முகம் அறிந்த பாரதி:

ஒட்டுமொத்த குடும்பமும் பாரதியை கேள்வி கேட்டு திட்டுகிறது. பாரதியும், வெண்பா வயிற்றில் வளரும் குழந்தைக்காக தான் இந்த கல்யாணத்தை செய்ய ஒற்றுக் கொண்டேன் என்று உண்மையை உடைக்கிறார். உடனே, ரோகித் அது என்னுடைய குழந்தை என்று சொல்கிறார். பின் உண்மை அறிந்தவுடன் பாரதி கோபப்பட்டு வெண்பாவை அடிக்கிறார். மேலும், பாரதியின் மொத்த குடும்பமும் திட்டி விட்டு அங்கிருந்து செல்கிறார்கள். இதனை அடுத்து வெண்பாவிற்கும் ரோஹித்துக்கும் திருமணம் செய்து வைக்க அவருடைய அம்மா ஏற்பாடு செய்கிறார்.

சீரியலின் புது டீவ்ஸ்ட்:

இப்படி பரபரப்பான சம்பவங்கள் சீரியலில் நடந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் சீரியலில் பாரதிக்கும், வெண்பாவிற்கும் திருமண ரிசப்ஷன் நடப்பது போன்ற சூட்டிங் வீடியோ ஒன்றை இன்ஸ்டாக்ராமில் வெண்பா பதிவிட்டு இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் பலருமே ஷாக் ஆகி, இது நிஜமா? இல்லை கனவா? சீரியலில் வரப்போகிற புது டீவ்ஸ்டா? என்றெல்லாம் குழப்பத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Advertisement