‘மனசுல விக்ரம் கமல்னு நினைப்பு, தம் அடிச்சிட்டு Disclaimer கொடுக்குறாரு – கேலிக்கு உள்ளான புதிய பாரதி சிப்பு.

0
787
sibbu
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது.மேலும், இந்த தொடரில் பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார். முதலில் கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருந்த பாரதி கண்ணம்மா சீரியல் முடிவடைய இருக்கிறது என்று கடந்த சில மாதங்களாகவே தகவல் வெளியான வண்ணம் இருந்தது. ரசிகர்களும் இப்போது முடிந்துவிடும், அப்போது முடிந்துவிடும் என்று காத்து காத்து 3 மாதங்களாக சென்று விட்டது. மேலும் இந்த சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்னட் எதிர்பாராததை எதிர்ப்பாருங்கள் என்று பலவிதமான ட்விட்களையும் இந்த சீரியலில் கொடுத்து கதையை நகர்த்தி வந்தார்.

- Advertisement -

பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ் காட்சியில் தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஆர்.ஜே.பாலாஜி, பிக் பாஸ் பிரபலம் ஷிவின் என பலரும் கலந்து கொண்டனர். பாரதி கண்ணம்மா தொடர் முடிந்த கையோடு இரண்டாம் பாகம் துவங்கி இருக்கிறது. இதில் பாரதியாக ரோஜா சீரியல் நாயகன் சிபு சூர்யன் நடிக்கிறார். பாரதி பெரிய பணக்கார வீட்டு பிள்ளை. ஆனால் இவருடைய தந்தை சிறுவயதிலேயே இறந்து விட்டார்.

இப்படியிருக்க பாரதியின் 25வது பிறந்தநாளை கொண்டாட ஊரில் உள்ள பெரியவர்கள் இவரை காண இவரின் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்படி இருக்க பாரதி காலையிலேயே குடிபோதையில் ஊர்மக்களை கான வருகிறார். ஏற்கனவே பாரதியின் தந்தை மறைந்த நிலையில் பாரதியும் இப்படி இருப்பதை பார்த்து வருத்தமடைகிறார் பாரதியின் தாய். கதாநாயகன் பாரதி இப்படி இருக்க மறுபுறம் கதாநாயகி மத்திய சிறைச்சாலையில் இருந்து வெளியில் வருகிறார். இவரின் பெயர் கண்ணம்மா கிடையாது சித்ரா.

-விளம்பரம்-

இப்படி போன சீசனாக்கும் இந்த சீசனுக்கு சம்மந்தம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கும் இந்த தொடரில் சமீபத்தில் இந்த கதையின் நாயகன் பாரதி, பாரில் குடித்துக்கொண்டும் புகைபிடித்துக்கொண்டும் இருக்கும்படியான காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது. இந்த காட்சியை பார்த்த பலரும் பாரதி கதாபாத்திரத்தை ஏன் இவ்வளவு கேவலமாக எடுத்துக்கொண்டு செல்கிறீர்கள் என்று கூறி வந்தனர்.

அதே போல சீரியலில் தான் குடிப்பதும் தம் அடிப்பதும் இல்லாமல் இருந்தது தற்போது இதிலும் கொண்டு வந்துவிடீர்களா என்று விமர்சித்து வந்தனர்.. இப்படி ஒரு நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள சிபு ‘உங்கள் அனைவரின் அக்கறைக்கும் நன்றி புகைப்பிடிப்பதும் குளிப்பதும் உடல் நலத்திற்கு கேடு என்பது எனக்கு தெரியும் அதை நான் எப்போதும் ஊக்கப்படுத்துவதில்லை ஆனால் கதாபாத்திரத்திற்கு தேவைப்படுவதால் தான் இதை நான் செய்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

சிபுவின் இந்த விளக்கத்தை கேலி செய்துள்ள சில நெட்டிசன்கள் ‘மனசுல விக்ரம் கமல்னு நினைப்பு. characterகு தேவைன்றதால தம் தண்ணி அடிக்கிறாராம். இவர் பண்றத பாத்து இவரோட fans ? அப்படி பண்ண கூடாதுனு disclaimer கொடுக்குறாராம் இந்த நடிப்பு அசுரன். அப்படியே ஹீரோயின் கூட நெருக்கமா நடிக்கிறதுக்கு கதைக்காக, அப்படித்தானே ? என்று பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Advertisement