தனக்கே அத்தனை போட்டோ ஷூட் செஞ்சார், மகன விடுவாரா – தன் மகனை வைத்து பரீனா நடத்தியுள்ள போட்டோ ஷூட்.

0
963
farina
- Advertisement -

ச சமீபத்தில் பிறந்த தன்னுடைய மகனுக்கு சொகுசு ஹோட்டலில் பெயர் சூட்டு விழாவை நடத்தி இருந்த நிலையில் தற்போது தன் மகனின் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் பரீனா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது.சின்னத் தம்பி பெரியதம்பி, ராஜா ராணி, மௌன ராகம், கடைக்குட்டி சிங்கம் என்று சினிமா டைட்டில்களை வைத்து ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் நல்ல வெற்றியை பெற்றது. அந்த வகையில் இதே பாணியில் சினிமா டைட்டிலை வைத்து ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

வெண்பா விலகல் :

இந்த தொடரில் கண்ணம்மாவாக ரோஷினி நடித்துவந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக வினுஷா தேவி நடித்து வருகிறார். கண்ணம்மா கதாபாத்திரத்துக்கு பின் இந்த தொடரில் அதிகம் பிரபலமானது வெண்பா கதாபாத்திரம் தான் இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வருகிறார் நடிகை பரீனா. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதையும் பாருங்க : ‘ஊ சொல்றியா மாமா’ – பாடலில் ஆடியது குறித்து முதன் முறையாக மனம் திறந்த சமந்தா. வீடியோ இதோ.

- Advertisement -

கர்ப்பகால போட்டோ ஷூட் :

இந்த நிலையில் பரீனா கர்ப்பமாக இருப்பதை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்து இருந்தார். கர்ப்பமாக இருந்த போது பல விதமான போட்டோ ஷூட்களை நடத்தி வந்தார் பரீனா. இதனால் இவர் மீது சமூக வலைதளத்தில் பல விதமான நெகட்டிவ் கமன்ட்சுகள் கூட வந்தது. ஆனால், அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன்னுடைய கர்ப காலத்தை என்ஜாய் செய்யும் விதமாக பல விதமான போட்டோ ஷூட்களை நடத்தி வந்தார்.

அதிலும் குறிப்பாக நீருக்கு அடியில் இவர் நடத்திய போட்டோ ஷூட் பெரும் வைரலானது. இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இவருக்கு குழந்தை பிறந்தது. தனக்கு ஆண் குழந்தை பிறந்து இருப்பதை அதனை ஒரு குட்டி ஷூ புகைப்படம் மூலம் அழகாக தன் இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்து இருந்தார் பரீனா. பரீனா இல்லாததால் இந்த சீரியலின் சுவாரஸ்யம் கொஞ்சம் குறைந்து இருக்கிறது.

-விளம்பரம்-

மீண்டும் வந்த வெண்பா :

இப்படி ஒரு நிலையில் குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே பரீனா பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். அந்த புகைப்படங்கள் சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார் பரீனா. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாரதி கண்ணம்மா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் பரீனா. அதில் தன் பச்சிளம் குழந்தைக்கு பாலூட்டியபடியே மேக்கப் போட்டு கொண்டு இருந்த இவரது டெடிகேஷனை பாராட்டி இருந்தனர்.

மகன் Zayn -ன் போட்டோ ஷூட் :

ஆனால், இன்னும் இவர் நடித்த காட்சிகள் ஒளிபரப்பாகவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை பரீனாவின் மகனின் பெயர் சூட்டு விழா பிரபல தனியார் ஹோட்டலில் கோலாகளமாக நடைபெற்றுது. மேலும், தன் மகனுக்கு Zayn Lara Rahman என்று பெயர் வைத்துள்ளார். இந்த நிலையில் தன் மகனின் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

Advertisement