பாரதி கண்ணம்மா தொடரில் என் ட்ரி கொடுத்த புதிய கண்ணம்மா – அதிகாரபூர்வ ப்ரோமோ வீடியோ.

0
392
Barathi Kannamma
- Advertisement -

பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து ஹேமா வெளியேறிய நிலையில் தற்போது அவருக்கும் பதில்புதிய நாயகி களமிறங்கி இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் பாரதி கண்ணம்மா ஒன்று. இந்த சீரியல் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்றுகொண்டிருக்கின்றது. மேலும், பாரதி கண்ணம்மா சீரியல் இல்லத்தரசிகளின் பேவரட் சீரியல்களில் ஒன்றாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

-விளம்பரம்-

இந்நிலையில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி ஹரிப்ரியன் தற்போது இந்த சீரியலில் இருந்து திடீரென விலகியுள்ளார்.அக்டோபர் 23ஆம் தேதி சனிக்கிழமை சூட்டிங்கில் ரோஷினி கலந்து கொண்டுள்ளார். பின் நான் இன்றில் இருந்து சீரியலில் இருந்து விடை பெறுகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டாராம். தற்போது இந்த தகவல் பெரும் அதிர்ச்சியாக உள்ளது. மாடலிங் மூலம் தன்னுடைய கேரியரை தொடங்கினார் ரோஷினி. அதற்கு பிறகு தான் இவர் சின்னத்திரை நோக்கி வந்தார்.

இதையும் பாருங்க : ‘பிரிவால் வாடிய சமந்தா’ லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி புகைப்படம் இதோ.

- Advertisement -

உண்மையாகவே கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம். இந்த சூழலில் திடீரென சீரியல் இருந்து ரோஷினி வெளியேறியது குறித்து ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்து வருகின்றனர். அதில் சிலர் இவர் சீரியல் பிரபலத்தின் மூலம் இவருக்கு சினிமாவில் பல பட வாய்ப்புகள் வந்ததாகவும், சினிமாவில் கவனம் செலுத்துவதற்காக தான் சீரியலில் இருந்து வெளியேறுகின்றார் என்றும் கூறுகின்றனர்.

இந்த நிலையில் பாரதி கண்ணாமாவில் யார் அடுத்த கண்ணம்மா யார் என்ற மிகப்பெரிய கேள்வி இருந்தது. இப்படி ஒரு நிலையில் யாரடி நீ மோஹினி போன்ற தொடர்களில் நடித்த நக்ஷத்ரா இத்தொடரில் கண்ணம்மாவாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது வெளியாகி இருக்கும் தகவலின் படி ‘N4’ என்ற படத்தில் நடித்த வினுஷா தேவி என்பர் கண்ணம்மா ரோலில் நடிக்க இருக்கிறார் . இது தொடர்பான ப்ரோமோவையும் விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

-விளம்பரம்-
Advertisement