பிரேமலதா விஜயகாந்த் மக்களை ஏமாற்றுகிறார் என்று பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் விஜயகாந்தின் உடல்நிலை குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. கேப்டன் விஜயகாந்த் சில ஆண்டுகளாக உடல் நலம் சரியில்லாத காரணத்தால் சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று வருகிறார். அதோடு இவர் அடிக்கடி தொடர் சிகிச்சைக்கு எடுத்து வருகிறார்.
இப்படி இருக்கும் நிலையில் கடந்த மாதம் விஜயகாந்த் அவர்கள் இருமல், சளி அதிகமாக உள்ளதால் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருந்தது. இதனால் இவரை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள். பின் விஜயகாந்தின் நுரையீரலில் பிரச்சனை இருப்பதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சில தினங்களுக்கு முன்பு மியாட் மருத்துவமனையில் இருந்து விஜயகாந்த் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்கள்.
மருத்துவர் அறிக்கை:
அதில், விஜயகாந்தின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால், கடந்த 24 மணி நேரமாக அவருடைய உடல்நிலை சீராக இல்லை. அவருக்கு நுரையலுக்கான சிகிச்சை வழங்கப்பட வேண்டும். இதனால் அவர் 14 நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள். இதை அறிந்த விஜயகாந்தின் ரசிகர்களும், தொண்டர்களும் கண்ணீர் மல்க கதறி அழுது இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் பலருமே கோயில்களில் விஜயகாந்த் உடல் நலம் தேறி மீண்டு வர வேண்டும் என்று பிரார்த்தனைகளையும் அபிஷேகங்களையும் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
விஜயகாந்த் உடல்நிலை:
இப்படி இருக்கும் நிலையில் சில தினங்களாகவே விஜயகாந்தின் உடல்நிலை மோசமாக இருக்கிறது. அவர் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் செய்தி வந்திருக்கிறது. மேலும் விஜயகாந்த்திற்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருப்பதாக எல்லாம் தகவல் வெளியாகியிருந்தது. இதனை அடுத்து விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொருளாளரும் ஆன பிரேமலதா விஜயகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
பிரேமலதா விஜயகாந்த் வீடியோ:
அதில், வதந்திகளை நம்ப வேண்டாம். கேப்டன் நன்றாக தான் இருக்கிறார். அவர் விரைவில் வீடு திரும்புவார். நான் அருகில் இருந்த அவரை பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி யிருந்தார். பின் மருத்துவமனையில் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை அவருடைய மகன் சண்முக பாண்டியன் சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். இது தொண்டர்களுக்கு ஆறுதலை அளித்து இருக்கிறது. இந்நிலையில் இது குறித்து பயில்வான் ரங்கநாதன் பேட்டி அளித்து இருக்கிறார்
பயில்வான் பேட்டி:
அதில் அவர், இது சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமே இல்லை. இது ஒரு மாதத்திற்கு எடுத்த புகைப்படம். தொண்டர்களையும் ரசிகர்களையும் ஆறுதல் படுத்துவதற்காக தான் பிரேமலதா இப்படி செய்கிறார். நடிகர் சங்கத்திலிருந்து வந்த நாசர், செல்வமணி கூட விஜயகாந்தை நேரில் சந்திக்கவில்லை. இதை செல்வமணியே கூறியிருந்தார். மோசமான நிலையில் இருக்கும் போது விஜயகாந்த் எப்படி கண்ணாடி போட்டுக்கொண்டு, ஆடை அணிந்து கொண்டு இருக்க முடியும்? இது தொண்டர்களை திருப்தி படுத்த பிரேமலதா ஏமாற்றுகிறார் என்று பேசி இருக்கிறார்.