நான் Final வரை போகனும்னு – வெளியேற்றத்திற்கு பின்னர் ஜோவிகா வெளியிட்ட முதல் பதிவு.

0
436
- Advertisement -

பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் ஜோவிகா முதல் பதிவை போட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7ல் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் வனிதாவின் மகள் ஜோவிகாவும் ஒருவர். ஆரம்பத்தில் ஜோவிகா நன்றாக தான் விளையாடி வந்தார்.படிப்பு குறித்து விசித்திராவிடம் சண்டை போட்டது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று இருந்தது. ஆனால், நாட்கள் செல்ல செல்ல மாயா மற்றும் பூர்ணிமாவுடன் இணைந்து இவர் மற்றறவர்களை மரியாதை இல்லாமல் நடத்தியது இவருக்கு ஹேட்டர்ஸ்களை உருவாக்கியது.

-விளம்பரம்-

பின் ஜோவிகா அந்த கேங்கில் இருந்து பிரிந்து வந்த பின்னும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சுவாரசியம் எதுவும் கொடுக்கவில்லை . அதோடு ஜோவிகா, பிக் பாஸ் வீட்டில் பெரும்பாலும் சாப்பிடுவது, தூங்குவது, வழுக்கி விழுவது என்று தான் இருந்து வருகிறார். இதனால் சமூக வலைதளத்தில் ட்ரோல்களுக்கு அதிகமாகி இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் குறைந்த வாக்குகளை பெற்று ஜோவிகா எலிமினேட் ஆகி இருக்கிறார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸில் இருந்து வெளியேறிய ஜோவிகா, கடிதம் ஒன்றை எழுதி அதனை பதிவிட்டுள்ளார். அதில் ‘என்னை அன்போடு அரவணைத்து, உற்சாகப்படுத்தி, பாராட்டி, என்னை ஒரு சொந்தம் போல பார்த்துக்கொண்ட ஒவ்வொருவருக்கும் இந்த கடிதத்தை எழுதுகிறேன். உங்கள் அன்பும் ஆதரவும் இல்லாமல் இந்த பயணத்தில் நான் எவ்வளவு தூரம் பயணத்திற்கு முடியாது.

என்னை இறுதிப் போட்டி வரை செல்வேன் என்று என்னை வழி நடத்துபவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் உண்மையாகவே வீட்டிற்கு சென்று என் அம்மாவுடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எனக்கு எல்லாமே அவர்தான் அவரை பார்த்துக் கொள்வதோடு அவரை பாதுகாப்பதும் என்னுடைய கடமையாகும். கடந்த வாரம் முதலே நான் எவ்வளவு சீக்கிரம் வீட்டிற்கு செல்ல வேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் செல்ல வேண்டும் என்று உறுதியாக நம்பினேன்.

-விளம்பரம்-

இந்த பயணத்தின் மூலம் நிறைய நினைவுகளையும் நான் கற்றுக்கொண்ட விஷயங்களையும் எடுத்துக் கொண்டு செல்கிறேன். உள்ளே இருக்கும் அனைத்து போட்டியாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். சிறந்த போட்டியாளர் வெற்றி பெறட்டும். நான் எதிர்பார்ப்பது ஒன்றும் இல்லை. நான் இந்த பயணத்தில் செய்த சரி, தவறு ஆகியவற்றை ஒப்புக்கொள்கிறேன். எண்டிமாலுக்கும் டிஸ்னி ஹாட்ஸ்டார் இருக்கும் சேனலுக்கும் . மேலும் இதற்கு பின்னால் கடினமாக உழைக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என்னுடைய உண்மையான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் இல்லாமல் எது நடந்திருக்காது. இனிவரும் நாட்களில் நான் செய்யும் வேலைகள் மூலமாக உங்கள் மனதில் எப்போதும் நிறைந்திருப்பேன் என்று நம்புகிறேன். தடை அலைகளை தாண்டி தொடர்ந்து நீந்தி கொண்டே இருங்கள் – ஜோதிகா விஜயகுமார்’ என்று உருக்கமுடன் குறிப்பிட்டு இருக்கிறார்.

Advertisement