இதே வேலை தான் ச்சீ, எத்தனை பேரு – விஜயலக்ஷ்மியை கடுமையாக விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்.

0
1332
- Advertisement -

நடிகை விஜயலட்சுமி குறித்து பயில்வான் ரங்கநாதன் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் விஜயலட்சுமி. சில ஆண்டுகளாகவே சோசியல் மீடியாவில் இவரைப் பற்றி பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் தான் உள்ளன. அதுமட்டுமில்லாமல் தனக்கு பிரச்சனை இருப்பதால் இணையத்தில் தனக்கு உதவி செய்யுங்கள் என்றும் இவர் வீடியோ போட்டிருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனிடையே நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தன்னை மூன்று வருடமாக காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்ளவதாக சொல்லி தற்போது மறுக்கிறார் என்று போலீசில் புகார் செய்திருந்தார்

-விளம்பரம்-

இது தொடர்பாக விஜயலக்ஷ்மி வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. ஒரு கட்டத்தில் விஜயலக்ஷ்மி தற்கொலைக்கு கூட முயன்று இருந்தார். ஆனால், சமீப காலமாக சீமானை பற்றி எந்த விஷயத்தையும் பேசாமல் இருந்து வந்த விஜயலக்ஷ்மி சமீபத்தில் சீமான் மீது மீண்டும் போலீசில் புகார் அளித்திருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், நடிகை விஜயலட்சுமி பல பேர் வாழ்க்கையில் விளையாடி இருக்கிறார். தற்போது அவர் மீண்டும் சீமானிடம் வாலாட்டி கொண்டிருக்கிறார்.

- Advertisement -

சீமான்-விஜயலக்ஷ்மி பிரச்சனை:

பிரபல நடிகர்களிடம் போக வேண்டியது, உல்லாசமாக இருப்பது, அவர்களிடம் பண உதவி கேட்பது, பணம் கேட்டு மிரட்டுவது, அவர்கள் தரவில்லை என்றால் போலீசில் புகார் அளிப்பது இதே தான் இவர் வேலையாகவே செய்து கொண்டிருக்கிறார். இவர் யார் யார் வாழ்க்கையில் விளையாடிருக்கிறார் தெரியுமா? முதலில் இவர் 2006 ஆம் ஆண்டு கன்னட இயக்குனர் ரமேஷ் உடன் உறவில் இருந்தார். அவருடன் விஜயலட்சுமி போட்ட ஆட்டம் கொஞ்சம் நஞ்சம் இல்லை. பின் அவர் பணம் தரவில்லை என்றவுடன் போலீசில் புகார் செய்து விட்டார். இவர் 2007 ஆம் ஆண்டு கன்னட நடிகர் சுர்ஜூன் உடன் உறவில் இருந்தார்.

பயில்வான் அளித்த பேட்டி:

அவரிடம் இவர் சில லட்சங்களை வாங்கினார். அதற்கு பின் அவர் தரவில்லை என்றவுடன் போலீசில் புகார் அளித்தார். 2010 ஆம் ஆண்டு தான் சீமானிடம் வந்திருக்கிறார். இருவரும் ஒரே இடத்தில் வாழ்ந்ததெல்லாம் உண்மைதான். ஆனால், விஜயலட்சுமி செய்த தில்லுமுல்லுகள் எல்லாம் சீமான் அறிந்து கொண்டு ஒதுங்கி விட்டார். பின் 2017 ஆம் ஆண்டு விஜயலட்சுமி மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த விஜயலட்சுமி சிகிச்சை எடுத்திருந்தார். அப்போதுதான் கன்னட நடிகர் ரவி பிரகாஷிடம் தொடர்பு ஏற்பட்டது. அவர் விஜயலக்ஷ்மி நிலைமையை பார்த்து பரிதாபப்பட்டு உதவி இருந்தார். அவரிடமும் விஜயலட்சுமி சில லட்சங்களை வாங்கினார்.

-விளம்பரம்-

விஜயலக்ஷ்மியை வெளுத்து வாங்கிய பயில்வான்:

அதற்குப்பின் அவர் மீது அவர் போலீசில் புகார் அளித்திருந்தார். 2021 ஆம் ஆண்டு நடிகர் ஜெகதீசுடன் நெருக்கமாக பழகி இருந்தார் விஜயலக்ஷ்மி. அதற்குப்பின் அவரைப் பற்றியும் போலீசில் புகார் அளித்தார். தற்போது வேறு யாரும் கிடைக்கவில்லை என்றவுடன் மீண்டும் சீமானிடமே வந்திருக்கிறார். சீமான் என்னை ஏழு முறை கரு கலைப்பு செய்துவிட்டார் என்றார். அவர் சொன்னது ஒரு பக்கம் இருக்கட்டும். நீ ஏன் செய்தாய்? உன் மூளை எங்கே போச்சு? கருக்கலைக்க அவர் எவ்வளவு பணம் கொடுத்தார்? அதை சொல்லவே இல்லையே? ஒவ்வொரு முறையும் சென்னை வந்து பெங்களூர் போகும் போது பத்து லட்சம் ரூபாய் இல்லாமல் போக மாட்டார் விஜயலக்ஷ்மி.

சீமான் குறித்து சொன்னது:

அதோடு எங்க அக்கா சாகப் போறா என்ற ஒரு டயலாக்கை சொல்லி எல்லாரிடமும் பணம் வாங்கி இருக்கிறார். சீமானுக்கு திருமணம் நடந்த போது நீ ஏன் இங்கு வந்து திருமணத்தை நிறுத்தவில்லை? அப்போ பணத்தை வாங்கிக் கொண்டு அமைதியாக தான் இருந்தாய். சீமானை நான் நல்லவனா சித்தரிக்க விரும்பலை. அவர் பழகியது எல்லாம் உண்மைதான். ஆனால், நீ கொடுத்த புகாரை நீயே வாபஸ் வாங்கிவிட்டு இப்போது 10 ஆண்டுகள் கழித்து மறுபடியும் அந்த புகாரை விசாரிக்க சொல்வது ஏன்? அதுமட்டுமில்லாமல் இப்போது கிடைத்த தகவல் என்ன என்னவென்றால், மீண்டும் விஜயலட்சுமி 10 லட்சம் ரூபாய் சீமானிடம் வாங்கிவிட்டு சத்தம் இல்லாமல் பெங்களூரு போயிருக்கிறார் என்று வெளுத்து வாங்கி இருக்கிறார்.

Advertisement