உண்மை பணத்தைவிட வலிமையானது – லியோ படத்திற்கு சென்சார் போர்ட் வைத்த செக்கால் படு குஷியில் ராஜேஸ்வரி.

0
3739
Leo
- Advertisement -

லியோ படத்தின் நான் ரெடி பாடலில் இருந்து சில வரிகள் நீக்கப்பட்டு இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு.

-விளம்பரம்-

இந்த படத்தை வம்சி இயக்கி இருந்தார். தமன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருந்தார். இந்த படம் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு வெளியாகி இருந்தது. வாரிசு படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், உலக அளவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது. இதனை அடுத்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். இதற்கு முன் லோகேஷ் அவர்கள் விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கி இருந்தார்.

- Advertisement -

லியோ படம்:

மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. அதோடு இந்த படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடல் வெளியாகி இருக்கிறது.

நா ரெடி பாடல் குறித்த சர்ச்சை:

இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலம். மேலும், இந்த பாடலின் படப்பிடிப்பிற்காக சென்னை ஃபிலிம் சிட்டியில் பிரமாண்டமான செட் ஒன்று போடப்பட்டு எடுக்கப்பட்டது. இந்தப்பாடலில் கிட்டத்தட்ட 500 டான்ஸ்டர்கள் விஜயுடன் இணைந்து ஆடுகிறார்கள். பிரபல நடன இயக்குநர் தினேஷ் இந்தப்பாடலுக்கு நடன வடிவமைப்பு செய்து இருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். ஆனால், நா ரெடி பாடலில் போதைப் பொருளை ஊக்குவிக்கும் வகையிலும், புகைபிடிக்கும் காட்சிகளிலும் விஜய் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

சர்ச்சை வரிகள் நீக்கம்:

இது தொடர்பாக தான் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். அதில் போதைப் பொருள் புழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரவுடிசத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த பாடல் இருக்கிறது. இதனால் இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். அந்த வகையில் அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா, விஜய் பாடிய நா ரெடி பாடலுக்கு தடைவிதிக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார். இந்த நிலையில் லியோ படத்தின் நான் ரெடி பாடலில் இருந்து சில வரிகள் நீக்கப்பட்டு இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

ராஜேஸ்வரி பதிவு:

நான் ரெடி பாடலில் இருந்து சர்ச்சைக்குரிய வரிகளில் நீக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் பத்தாது பாட்டிலு நா குடிக்க.. அண்டாவ கொண்ட சியர்ஸ் அடிக்க.. பத்த வச்சி புகையை விட்டா பவர் கிக்கு..புகையில பவர் கிக்கு..மில்லி உள்ள போனா போதும்.. கில்லி வெளியே வருவாண்டா.. உள்ளிட்ட வரிகள் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் கட் செய்து இருக்கிறது. இதை ராஜேஸ்வரி டீவ்ட்டர் பக்கத்தில் பகிர்ந்து, நான் ரெடியா பாடலில் வரிகளை மாற்ற உத்தரவு. நீதி வென்றுவிட்டது. தணிக்கை குழுவிற்கு மிக்க நன்றி. உண்மை பணத்தைவிட வலிமையானது. எனது புகாரை ஏற்று நான் எடுத்து கூறிய சமூகத்திற்கு எதிரான பாடல் வரிகள் நீக்கபட்டது. எமது சமூகப் பணியும் சட்டப் போராட்டங்களும் அடுத்த தலைமுறை நலனுக்காக தொடரும் என்று கூறி இருக்கிறார்.

Advertisement