ஈஷா யோகா மையம் குறித்து பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா முழுவதும் வருடம் வருடம் மஹா சிவாரத்திரி கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்று. இந்த விழாவை சிவ பக்தர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். இந்த சிவராத்திரியில் இரவு முழுவதும் கோயில்களிலோ அல்லது வீடுகளிலோ தூங்காமல் கண் முழித்து சிவபெருமானை சிவ பக்தர்கள் வழிபடுவார்கள்.
அதுமட்டுமில்லாமல் கோவில்களில் சிவராத்திரி அன்று நடை சாத்தாமல் பூஜைகளும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் வெள்ளியங்கிரியில் உள்ள ஈசா யோகா மையம் சிவராத்திரி பெயர் போனது. கோவையில் உள்ள ஜக்கி வாசுதேவின் தலைமையில் ஈஷா யோகா மையம் துவங்கப்பட்ட நாளில் இருந்தே ஆண்டு தோறும் இங்கு சிவ ராத்திரி பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல சிவராத்திரி பூஜை என்ற பெயரில் இங்கே நடக்கும் நிகழ்ச்சிகள் கொஞ்சம் நஞ்சம் இல்லை.
ஈஷா யோகா மையம்:
சற்குரு தலைமையில் சிறப்பு தியான நிகழ்ச்சி எல்லாம் நடைபெறும். இந்த விழாவிற்கு சிவ பக்தர்கள் மட்டும் இல்லாமல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விஐபிகள், விவிஐபிகள், பொதுமக்கள் அரசியல் பல பேர் கலந்து கொள்வார்கள். அதிலும், சினிமாவில் உள்ள பல்வேறு நடிகைகள் சத்குருவின் பக்கதர்களாக இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த ஆண்டும் ஈஷா மையத்தில் கடந்த வாரம் சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதோடு இந்த சிவராத்திரி விழாவில் இசை கச்சேரி நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு சங்கர் மகாதேவனின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள்:
இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, திரிபுரா ஆளுநர் இந்திரா சேனா ரெட்டி, தமிழக இணை அமைச்சர் எல்.முருகன், பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் அமைச்சர் உட்பட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். பின் இதில் தென்னிந்திய பிரபலங்களான தமன்னா, சந்தானம், பூஜா ஹெக்டே உட்பட பல பேர் கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், இந்த விழாவில் இந்தியாவில் சேர்ந்தவர்கள் மட்டும் இல்லாமல் வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம்.
ஈஷா யோகா மையம் குறித்த சர்ச்சை:
இது ஒரு பக்கம் இருக்க, ஈஷா யோகா மையத்தை குறித்து பல சர்ச்சைகளும் எழுந்து வருகின்றது. இந்த மையத்தை பல்லாயிரம் ஹெக்டர் அளவில் காடுகளை அழித்து தான் ஜக்கி உருவாக்கினார் என்றும் இதனால் வனவிலங்குகள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் மையத்திற்கு வரும் பக்தர்களை அவர் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து விடுகிறார் என்றெல்லாம் கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இந்த நிலையில் இது குறித்து பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றை போட்டு இருக்கிறார்.
பயில்வான் ரங்கநாதன் வீடியோ:
அதில் அவர், நான் எப்போதும் ஒரு விஷயத்தில் சர்ச்சை இருக்கிறதா என்பதை தேடுபவன். அப்படி ஏதாவது கிடைக்கும் என்று தான் ஈஸா யோகா மையத்திற்கு சென்றேன். ஆனால், அங்கு அப்படி எதுவுமே எனக்கு கிடைக்கவில்லை. எனக்கு நிம்மதி தான் கிடைத்தது. எவ்வளவுதான் பணம் சம்பாதித்து சொத்து சேர்த்து வைத்திருந்தாலும் ஒரு மனிதனுக்கு நிம்மதி தான் ரொம்ப முக்கியம். அந்த நிம்மதியை தேடி தான் நடிகர் நடிகைகள் எல்லோருமே ஈசா யோகா மையத்திற்கு செல்கிறார்கள் என்று கூறியிருந்தார். இப்படி இவர் கூறி இருந்ததற்கு சிலர் ஆதரித்தாலும், சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.