வைரமுத்து ஒரு கல்யாணத்திற்கு 50,000 வாங்குகிறார், அப்புறம் எப்படி – சின்மயி தாயாருக்கு பதிலடி கொடுத்த பயில்வான்

0
247
- Advertisement -

சமீபத்தில் பொதுவெளியில் மற்ற நடிகர்களை பற்றி பேசுவதை கண்டித்த சின்மயி தாயாருக்கு, பயில்வான் ரங்கநாதன் கொடுத்த பதிலடிதான் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து படத்தில் நடித்திருக்கிறார். பி ன் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த உடன் தனியாக யூடியூப் சேனல் உருவாக்கி அதில் சினிமா பிரபலங்கள் பலரை பற்றி அவதூராக பேசி வருகிறார்.

-விளம்பரம்-

அதோடு இவர் நீண்ட காலமாகவே பத்திரிக்கையாளராக பணியாற்றி வருகிறார். அதனால் சினிமா துறையில் நடக்கும் பல அந்தரங்க விஷயங்களை வெளி உலகத்திற்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறார். மேலும், இவர் எம்ஜிஆர் களத்தில் இருந்து தமிழ் சினிமாவில் இருந்து வருவதால் சினிமா நட்சத்திரங்களை பற்றி அறியாத பல ரகசியங்களை தன்னுடைய பத்திரிகையின் மூலம் வெளியிட்டு வருகிறார். அதோடு இவர் சினிமா துறையில் உள்ள நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் அவர்களைப் பற்றி அவதூறாக பேசி வீடியோக்களை வெளியிடுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார்.

- Advertisement -

சின்மயி தாயார் பேட்டி:

சமீபத்தில் சின்மயி தாயார் அளித்த பேட்டியில், வைரமுத்து சின்மையை போனில் அழைத்து, உன் பெயரை தேசிய விருதுக்கு பரிந்துரைச் செய்யப் போகிறேன். விரைவாக வா என்று அழைத்தார். இதனை தொடர்ந்து நானும், சின்மயியும் அவரை சந்திக்கச் சென்றோம். நான் காரை விட்டு இறங்குவதற்குள் சின்மயி அவரைப் பார்க்க சென்று விட்டாள். பிறகு நான் படிக்கட்டுகளில் ஏறி போகும் போது, அவள் தலைக்கலைந்து ஒற்றை செருப்புடன் கீழே வந்தாள் என்று கூறினார்.

நடந்தது என்ன:

மேலும் அவர் கூறுகையில், எனக்கு அங்கே ஏதோ தவறாக நடந்திருக்கிறது என்று புரிந்து கொண்டேன். நான் மற்ற பெற்றோர்களைப் போல அங்கேயே என்ன நடந்தது என்று கேட்டுக் கொள்ளாமல் அவளை அமைதியாக இரு என்று சொல்லி காரில் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டேன். அந்த இடத்திலேயே நீங்கள் காவல் துறைக்கு போன் செய்திருக்கலாமே என்று கேட்பீர்கள். ஆனால் நாங்கள் அப்போது மானம்,கௌரவத்திற்கு அஞ்சி அந்த விஷயத்தை மறைத்து வைத்திருந்தோம் என்று வேதனையோடு கூறினார்.

-விளம்பரம்-

பயில்வான் குறித்து:

பயில்வான் குறித்து சின்மயி தாயார் கூறுகையில், பயில்வான் ரங்கநாதன் செய்கிற அட்டூழியத்தை தாங்க முடியவில்லை. அவருக்கு நான் சில விஷயங்கள் சொல்ல வேண்டும். தயவுசெய்து அவர் குழந்தைகளை குழந்தைகளாக பார்க்க வேண்டும். பொதுவெளியில் மற்றவர்களை விமர்சனம் செய்வதை நிறுத்த வேண்டும். உங்களுக்கு பணம் தானே வேண்டும். நான் உங்களுக்கு தருவதோடு, உங்களை வைத்து நான் கஞ்சி ஊத்துகிறேன். தயவு செய்து இந்த காரியத்தை செய்யாதீர்கள் என்று அந்தப் பேட்டியில் கூறியிருந்தார்.

பயில்வான் பதிலடி:

இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பயில்வான், “வைரமுத்து கல்யாணத்திற்கு வருவதற்கு 50,000 வரை வாங்குகிறார். அப்படி இருக்கும் போது உங்கள் கல்யாணத்திற்கு எப்படி கூப்பிடாமலேயே வந்தார். அவள் எனக்கு கஞ்சி ஊத்துவதாக கூறி இருக்கிறாள். அவளுக்கெல்லாம் நான் பதில் சொல்ல தேவையில்லை. ஆகையால் இது குறித்து என்ன செய்தி வெளியானாலும், எனக்கு கவலை இல்லை. எனக்கு மாதம் 10 லட்ச ரூபாயை சம்பளமாக தரச் சொல்லுங்கள் நான் பொதுவெளியில் பேசுவதை நிறுத்தி விடுகிறேன்” என்று பேசி இருக்கிறார்.

Advertisement