திருட்டு காசுல படம் எடுக்குற நீ ரஜினி பத்தி பேச தகுதி இல்லை- தங்கர் பச்சனை வெளுத்து வாங்கிய பயில்வான்(பின்னணி இது தான்)

0
1295
- Advertisement -

ரஜினியை விமர்சித்து தங்கர் பச்சன் கூறிய கருத்திற்கு பயில்வான் ரங்கநாதன் கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக இருப்பவர் தங்கர் பச்சன். இவர் 40க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். மேலும், இவர் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர்,ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், ஒளி ஓவியர், நடிகர் என பன்முகங்களை கொண்டவர்.

-விளம்பரம்-

இவர் அழகி, சொல்ல மறந்தகதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, களவாடிய பொழுதுகள் என பல திரைப்படங்களை இயக்கியும் நடித்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பார்த்திபன், சேரன், நடித்து உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இவருடைய படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இவர் எப்பவுமே எதார்த்தமான கிராமப்புற கதைகளை மையமாக கொண்டு தான் படம் இயக்குவார்.

- Advertisement -

தங்கர் பச்சன் திரைப்பயணம்:

அந்த வகையில் தற்போது இயக்குனர் தங்கர் பச்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கருமேகங்கள் கலைகின்றன. இந்த படம் வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தை இயக்குனர் தங்கர் பச்சன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன், யோகி பாபு, எஸ் ஏ சந்திரசேகர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். தந்தை-மகனுக்கு இடையேயான பாச போராட்டத்தை மையமாகக் கொண்ட படம்.

கருமேகங்கள் கலைகின்றன படம்:

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். வைரமுத்து இந்த படத்திற்கு பாடல்களை எழுதி இருக்கிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் தங்க பச்சன் கூறி இருப்பது, மக்கள் நல்ல சினிமாவை விரும்பி பார்க்க வேண்டும். அதற்கு ஆதரவும் கொடுக்க வேண்டும். இப்போதெல்லாம் 200, 300, 500 கோடி என்று அதிக பொருள் செலவில் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படத்தில் எல்லாம் ஒன்றுமே இல்லை. இருந்தாலும், அந்த படத்தை மக்கள் சென்று பார்க்கிறார்கள்.

-விளம்பரம்-

ரஜினியை விமர்சித்த தங்கர் பச்சன்:

அது மட்டும் இல்லாமல் விழாவில் தங்கர்பச்சன் அவர்கள் ரஜினியை அவதூறாக பேசியிருக்கிறார். சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதுடன் 500 கோடிக்கு மேல் வசூலித்து இருக்கிறது. இந்த வசூலை பற்றியும் இவர் மோசமாக கருத்து சொல்லி இருக்கிறார். இந்த நிலையில் இது குறித்து பயில்வான் ரங்கநாதன் கொடுத்திருக்கும் பதிலடி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், திருட்டுப் பணத்தில் படம் எடுக்கும் நீ ரஜினியை பற்றி பேசுகிறாயா? கருமேகங்கள் கலைகின்றன படத்தின் தயாரிப்பாளர் துரை வீர சக்தி தானே.

வெளுத்து வாங்கிய பயில்வான்:

அவர் ஏற்கனவே ஓ மை கோஸ்ட் என்ற படத்தை தயாரித்திருந்தார். அவர் நியோ மேக்ஸ் நிறுவனத்தின் மூலம் மக்களிடம் இருந்து ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்து திருடிக் கொண்டு ஓடி விட்டார். இந்த விஷயம் எல்லாமே தெரியும். அவர் காசில் தான் நீ படம் எடுக்கிறாய். உனக்கெல்லாம் ரஜினி பற்றி பேச தகுதி இல்லை. நீ உண்மையான கலைஞன் தான். தமிழ் மீது அதிக மரியாதை உள்ள கலைஞன் தான். உன் மீது எனக்கும் நல்ல மரியாதை இருக்கிறது. இருந்தாலும், நீ ரஜினியை பற்றி ஏதாவது பேசினால் மொத்தமாக நார் அடித்து மரியாதையை கெடுத்து விடுவேன் என்று கொந்தளித்து பேசி இருக்கிறார்.

Advertisement