வெளியானது ‘Beast’ படத்தின் ட்ரைலர் – இது தான் அந்த Premium Large Formatஆ. எப்படி இருக்கு பாருங்க.

0
623
beast
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பீஸ்ட் படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். கடைசியாக விஜய்யின் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது. மேலும், இந்த படத்தின் அரபிக்குத்து பாடல் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

- Advertisement -

பீஸ்ட் படத்தின் பாடல்கள்:

அதுமட்டும் இல்லாமல் இந்த பாடலுக்கு ரசிகர்கள் முதல் இல்லாமல் வரை என பலரும் நடனமாடி வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள். இந்த பாடல் வெளியிட்டு மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் சென்று சாதனை படைத்துள்ளது. இதனை தொடர்ந்து பீஸ்ட் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் ‘ஜாலியோ ஜிம்கானா’ சமீபத்தில் வெளியாகி இருந்தது.

பீஸ்ட் பட ரிலீஸ் குறித்த தகவல்:

பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றார்கள். பின் கேஜிஎப் 2 படம் பீஸ்ட் படத்துடன் மோத இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் உலாவந்து கொண்டிருக்கிறது. கேஜிஎப் 2 மற்றும் பீஸ்ட் ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியிடுவதாக கூறப்பட்ட நிலையில் பீஸ்ட் படம் வெளியாகி ஒரு நாள் இடைவெளியில் அடுத்த நாள் கேஜிஎப் 2 படம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-15.jpg

பீஸ்ட் ட்ரைலர் :

Kgf படத்தின் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள நிலையில் பீஸ்ட் படத்தின் ட்ரைலரை ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்தியாவில் முதல் முறையாக  Premium Large Formatல் பீஸ்ட் ட்ரைலர் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் எதிர்பார்ப்பை கூட்டினர். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருக்கிறார்.

Advertisement