ரோட்ல கூட கொஞ்சம் மேடு பள்ளம் இருக்கும் – தன் உருவத்தை கேலி செய்தவருக்கு கோமாளி பட நடிகை கொடுத்த பதிலடி.

0
823
Samyuktha
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. சமீப காலமாகவே நடிகர் ஜெயம் ரவி அவர்கள் சிறப்பான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு இவரது நடிப்பில் வெளிவந்த படம் “கோமாளி”. இந்த படத்தை குறும் பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் என்பவர் தான் இயக்கி இருந்தார் . இதுவே அவர் இயக்கிய முதல் படம் ஆகும். இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இந்த கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதோடு வசூலிலும் நல்ல வேட்டை ஈட்டி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். இது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த கோமாளி படத்தில் பஜ்ஜி கடை காமெடி ஒன்று இடம் பெற்று இருக்கும். இந்த காமெடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.

- Advertisement -

இளசுகளை கவர்ந்த சம்யுக்தா :

இந்த படத்தில் இரண்டு நாயகிகள் நடித்து இருந்தனர். அதிலும் இந்த படத்தில் ஜெயம் ரவி பள்ளி மாணவராக வரும் பகுதியில் ஜெயம் ரவிக்கு காதலியாக முதல் பாதி முழுதும் தோன்றிய இவர் ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தவர நடிகை சம்யுக்தா. கோமாளி படத்தில் காஜல் அகர்வாலை விட இவர் தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருந்தார். கோமாளி படத்தை தொடர்ந்து “பப்பி” என்ற படத்தில் நடித்தார்.

சம்யுக்தா நடித்த படங்கள் :

அதே போல இவர் பிரபு தேவாவின் ‘தேள்’ படத்திலும் நடித்து இருந்தார். பல ஆண்டுகளாக ரிலீசுக்கு காத்திருந்த இந்த படம் சமீபத்தில் தான் வெளியானது. ஆனால், இந்த படம் மாபெரும் தோல்வியை தழுவியது. இதை தொடர்ந்து இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மன்மத லீலை’ படத்தில் நடித்து இருந்தார். அசோக் செல்வன் ஹீரோவாக நடித்து இருக்கும் இந்த படம் சமீபத்தில் தான் வெளியானது.

-விளம்பரம்-

உருவத்தை கேலி செய்த ரசிகர் :

மேலும், இந்த படம் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டுவருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். . அதே போல ஃபிட்னஸ் ஃப்ரீக்காக வளம் வரும் இவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அதீத கவனம் செலுத்தி வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் நடனமாடி பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

சம்யுக்தா பதிலடி :

இந்த வீடீயோவை கண்ட இதைக்கண்ட ரசிகர் ஒருவர், இவரின் உருவத்தை கேலி செய்யும் வகையில் இப்படி ஒரு தட்டையான விஷயத்தை நான் பார்த்ததே இல்லை. ரோட்டில் கூட மேடு பல்லம் இருக்கும் என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த சம்யுக்தா, இவ்வளவு ரசனை இல்லாத உன்னுடைய எதிர்காலம் மிகவும் மட்டமாக தான் இருக்கப் போகிறது என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement