விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. தமிழக இலங்கை நாட்டின் செய்தி தொகுப்பாளராக பணியாற்றியவர். பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மத்தியில் பிரபலமாகி விட்டார். அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்துள்ளது. மேலும், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது கவின் – லாஸ்லியா குறித்து காதல் கிசுகிசு சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டது.
இதனால் சோசியல் மீடியாவில் கவிலியா என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் கவிலியா காதல் குறித்து பல கிசுகிசுக்கள் வந்த வண்ணம் இருந்தது.ஆனால், இருவரும் அவரவர் வழியில் பயணிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் இவர்களுடைய காதல் என்ன ஆனது? என்று இன்னும் கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது. அதற்கு பிறகு லாஸ்லியாவின் தந்தை இழப்பு லாஸ்லியாவுக்கு மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது.
லாஸ்லியா நடிக்கும் படங்கள் :
பின்னர் லாஸ்லியா படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதிலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோதே கேஎஸ் ரவிக்குமார் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வாய்ப்புகள் காத்துக் கொண்டிருப்பதாக கூறியிருந்தார். அவர் சொன்னதை தொடர்ந்து பிக் பாஸ்க்கு பின்னர் ஆரி நடிக்கும் புதிய படத்தில் லாஸ்லியா கமிட்டானார்.அதன் பின்னர் ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து இருந்தார்.
கவின் லாஸ்லியா காதல் :
இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இவர் தர்ஷன் நடிக்கும் கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் கூடிய விரைவில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற லாஸ்லியாவிடம் கவின் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
காதல் பிரேக்கப் ஆனதுக்கு காரணம் :
இதற்கு பதில் அளித்த லாஸ்லியா ‘நாங்கள் இருவரும் பேசுவது கூட கிடையாது அதை மறைக்க ஒன்றுமில்லை நாம் எல்லாருமே மனிதர்கள்தான் அனைவருமே காதலிக்க தான் போகிறீர்கள் நாங்கள் இருவரும் காதலித்தோம் ஆனால் எங்கள் இருவருக்கும் செட் ஆகவில்லை அந்த வீட்டில் இருந்தவரை எங்களுக்குள் ஒரு தொடர்பு இருந்தது. ஆனால் வெளியில் வந்து பார்க்கும்போது அனைவரும் வேறு மாதிரி தான் இருப்பார்கள். அந்த வீட்டிற்குள் இருந்த போது அங்கு என்ன இருக்கிறதோ அதை வைத்து தான் இருந்தாக வேண்டும்.
வீடியோவில் 8 நிமிடத்தில் பார்க்கவும் :
லாஸ்லியா குறித்து கவின் :
ஆனால்,. வெளியில் வந்ததும் வேறு மாதிரி இருந்தது இதனால் 2 பேருக்கும் செட் ஆகவில்லை அதனால் பிரிந்து விட்டோம் என்று கூறியிருக்கிறார்’ ஏற்கனவே பேட்டி ஒன்றில் பேசிய கவின், அதற்காக நாம் கடைசிவரை உண்மையாக இருக்க வேண்டும். எவ்வளவு தூரம் போக வேண்டும் என்றாலும் அதற்காக போகவேண்டும்.அப்படிப்பட்ட உண்மையான காதலை இன்னும் நான் தற்போது தேடிக்கொண்டிருக்கிறேன். கண்டிப்பாக ஒருநாள் என்றைக்காவது அப்படி ஒரு விஷயம் அமையும் என்று கூறி இருந்தார்.