பாக்கியலட்சுமி சீரியலுக்கு வந்த பிக் பாஸ் அசீம் – TRPகாக என்னெல்லாம் பண்றாங்கபா.

0
361
azeem
- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியலில் பிக் பாஸ் அசீம் வந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருப்பது பாக்கியலட்சுமி சீரியல் தான். இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த தொடரில் இவர்களுடன் ரேஷ்மா, விஷால், ரித்திகா, வேலு லட்சுமணன், நேகா மேனன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த தொடர் பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. சீரியலில் பாக்கியா- கோபிக்கு விவாகரத்து ஆகி விடுகிறது. பின் கோபி அவர் ஆசைப்பட்ட மாதிரி ராதிகாவை திருமணம் செய்து கொள்கிறார். இதனால் கோபியின் மொத்த குடும்பமும் கோபி மீது கோபத்தில் இருக்கிறது.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

பின் இனியா வீட்டில் உள்ள எல்லோருடனும் சண்டை போட்டு கோபி வீட்டிற்கு சென்று விடுகிறார். கோபியின் அப்பா ராமமூர்த்தியும் கோபியின் வீட்டிற்க்கே வந்து தங்குகிறார். ராமமூர்த்தி-இனியா- ராதிகாவிடம் மாட்டி கொண்டு கோபிப்படும் பாடு என்று பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடு குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது, எழில் அமிர்தாவிடம் நட்பாக தான் இருக்க வேண்டும் காதல், கல்யாணம் என பண்ணக்கூடாது என்று ஈஸ்வரி சத்தியம் வாங்கிக் கொள்கிறார்.

சீரியலின் கதை:

எழிலும் வேறு வழி இல்லாமல் தன்னுடைய பாட்டிக்கு வாக்குறுதி கொடுக்கிறார். அடுத்த நாள் பாக்கியா, செல்வி இருவரும் கடைக்கு செல்கிறார்கள். அப்போது காலனி செக்யூரிட்டியாக இருப்பவர் பாக்யாவை கிண்டல் செய்கிறார். காலனி தேர்தல் குறித்து வம்பு இழுக்கிறார். ஆனால், பாக்யா எதுவும் பேசாமல் வந்துவிடுகிறார். இதை எல்லாம் கேட்டு கோபப்பட செல்வி, நானாக இருந்தால் கவுன்சிலர் ஆகியிருப்பேன் என்றெல்லாம் பாக்கியாவிடம் சொல்கிறார்.

-விளம்பரம்-

செழியன்-ஜெனி சண்டை:

ஆனால், பாக்கியா அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தன் அத்தை சொன்ன மாதிரி நிறைய வேலை இருக்கு என்னுடைய வேலையை பார்க்கிறேன் என்று சொல்கிறார். வீட்டில் ஜெனி, செழியன் இடம் எதற்கு நீ பாட்டியிடம் எழிலை மாட்டி விட்டாய் என சண்டை போடுகிறார். அதற்கு செழியன், எனக்கு அவன் லவ் பண்ணுவது பிடிக்கவில்லை என்று சொன்னவுடன் நம்ம லவ் பண்ணதுக்கு அவன் சப்போர்ட் தானே செய்தான் என்று எழிலுக்கு ஆதரவாக செழியனுக்கு சொல்லி புரிய வைக்கிறார்.

சீரியலுக்கு வந்த அசீம் :

இன்னொரு பக்கம், லோன் வாங்க பேங்கிற்கு பாக்கியா செல்கிறார். ஆனால், அங்கு பாக்கியாவின் கணவரான கோபியின் பான் கார்டு இருந்தால் தான் லோன் கிடைக்கும் என்று மேனேஜர் சொல்லி விடுகிறார். இதனால் ஏமாற்றத்துடன் பாக்யா வீடு வருகிறார். அப்போது வீட்டில் எழில், ஜெனி, ஈஸ்வரி, செல்வி எல்லோருமே பிக் பாஸ் அசீம் நடித்த சீரியல் ஒன்றை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்த பாக்யா பேங்கில் நடந்த விஷயத்தை கூறுகிறார். எல்லோரும் அதிர்ச்சி ஆகிறார்கள். இதோடு சீரியலை முடிக்கிறார்கள்.

Advertisement