கமல் பட நடிகையுடன் காதல், இரண்டே வருடத்தில் முடிவுக்கு வந்த பாக்யராஜின் முதல் கல்யாணம். முதல் மனைவி மறைந்தது எப்படி?

0
2822
- Advertisement -

பாக்கியராஜின் முதல் கல்யாணம் தொடங்கி முடிவுக்கு வந்தது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனரும், நடிகருமாக வலம் வந்து கொண்டிருப்பவர் பாக்கியராஜ். இவர் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த சுவரில்லாத சித்திரங்கள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் சிறந்த திரை கதை இருக்கும் படங்களை எடுப்பது தான் பாக்கியராஜின் தனி சிறப்பு. தற்போது இவர் படங்களை இயக்குவது இல்லை. படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த டாடா படத்தில் பாக்யராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இதனிடையே பாக்கியராஜ் நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். ஆனால், உண்மையில் பூர்ணிமா இரண்டாம் மனைவி தான்.

- Advertisement -

ப்ரவீனா திரைப்பயணம்:

பாக்யராஜின் முதல் மனைவி ப்ரவீனா. பாலச்சந்திரனின் இயக்கத்தில் வெளிவந்த மன்மத லீலை என்ற படத்தின் மூலம் தான் பிரவீனா சினிமாவுலகில் அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் மலையாளத்தில் சில படங்களில் நடித்தார். அதற்குப் பிறகு தெலுங்கு, கன்னடம் போன்ற படங்களிலும் நடித்தார். ஆனால், பெரும்பாலும் படங்களில் இவர் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் பின் என்பது காலகட்டத்தில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.

ப்ரவீனா-பாக்யராஜ் காதல்:

இப்படி இவர் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது பாக்கியராஜ் உடன் நட்பு ஏற்பட்டது. பிரவீனா சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பிடிக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும் போது தான் பாக்கியராஜும் சினிமாவில் போராடிக் கொண்டிருந்தார். பொருளாதார ரீதியாக பிரவீனா பாக்யராஜுக்கு உதவி செய்தார். பின் பாக்யராஜ் கதாநாயகனாக நடித்த பாமா ருக்மணியில் இரண்டாவது கதாநாயகியாக பிரவீனா நடித்திருந்தார்.

-விளம்பரம்-

மஞ்சள் காமாலையால் இறந்த மனைவி :

இந்த படத்தின் மூலம் பிரவீனாவிற்கு தமிழ் சினிமாவில் நல்ல பெயர் கொடுத்தது. அதற்குப் பிறகு 1981 ஆம் ஆண்டு பாக்கியராஜ்- பிரவீனா திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகும் பிரவீனா தொடர்ந்து நடித்து வந்தார். பின் 1983 ஆம் ஆண்டு மஞ்சள் காமாலை நோயால் பிரவீனா இறந்துவிட்டார். அப்போது இவருக்கு 25 வயது தான். திருமணம் இரண்டே வருடங்களில் பிரவீனா இறந்தது பாக்யராஜிற்கு பெரிய இடியாக அமைந்தது.

பாக்யராஜ் இரண்டாவது திருமணம்:

பிரவீனா உயிரிழந்த ஒரே வருடத்தில் பாக்கியராஜ் பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால், தற்போதும் தன்னுடைய முதல் மனைவியை மறவாத பாக்கியராஜ், பிரவீனா பரிசாக அளித்த மோதிரத்தை தற்போதும் அணிந்து கொண்டிருக்கிறார். அதேபோல பிரவீணாவின் புகைப்படம் பாக்கியராஜின் அலுவலத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

Advertisement