அடியாட்களுடன் வந்து என் குழந்தைய கொல்லப் பார்க்கிறார் – வீடியோவை வெளியிட்டு திவ்யா கதறல்

0
2416
Divya
- Advertisement -

என் குழந்தைகளை அர்னவ் கொல்ல நினைக்கிறார் என்று நடிகை திவ்யா ஸ்ரீதர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு தொடங்கி தற்போது வரை சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருப்பது அர்னவ்-திவ்யா விவகாரம் தான். இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து இருந்தார்கள். பின் கடந்த ஆண்டு தான் ரகசியமாக திருமணம் செய்து இருந்தனர். இவர்கள் இருவரும் இதற்கு முன் சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி என்ற தொடரில் நடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், திருமணம் ஆகி கொஞ்ச நாட்களிலேயே தான் கர்ப்பமாக இருப்பதை திவ்யா அறிவித்து இருந்தார்.
இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் அர்னவ் தன்னை ஏமாற்றிவிட்டதாக திவ்யா பகீர் குற்றச்சாட்டை எழுப்பி இருக்கிறார். அதோடு அர்னவிற்கு செல்லம்மா சீரியல் நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும், அதை கேட்டதற்கு அர்னவ் தன்னை தாக்கியதால் வயிற்றில் அடிபட்டு ரத்தம் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் திவ்யா கூறி இருந்தார்.

- Advertisement -

அர்னவ்-திவ்யா விவகாரம்:

இதனை அடுத்து காவல் துறையில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி தன் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காரணம் அர்னவ் தான் என்றும் திவ்யா புகார் கொடுத்து இருந்தார். இதனை அடுத்து அர்னவ் திவ்யா மீது குற்றச்சாட்டு வைத்து இருந்தார். இப்படி இருவருமே மாற்றி மாற்றி பேட்டி கொடுத்திருந்தார்கள். இதை தொடர்ந்து திவ்யா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அர்னவை கைது செய்தனர். பின் அர்னவ் ஜாமினில் வெளியில் வந்தார். வெளியில் வந்த பின்னரும் கர்ப்பமாக இருந்த திவ்யாவை அர்னவ் கண்டுகொள்ளவே இல்லை.

திவ்யாவுக்கு பிறந்த குழந்தை:

இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திவ்யாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனாலும், திவ்யாவை நேரில் சென்று சந்திக்காமல் இருந்தார் அர்னவ். மேலும், திவ்யாவும் தனது மகளை இதுவரை அர்னவிற்கு காட்டாமல் இருந்து வருகிறார். குழந்தை பிறந்த சில மாதம் ஆன நிலையில் தனது குழந்தையுடன் ஷூட்டிங்கிற்கு சென்று இருந்தார் திவ்யா. பின் பேட்டியில் திவ்யா, அர்னவ் பல பெண்களை ஏமாற்றி இருக்கிறார். என்னிடம் ஆதாரம் இருக்கிறது என்று கூறி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் நடிகர் அர்னவ் அவர்கள் சில வக்கீல்களை தன்னுடன் அழைத்துக் கொண்டு திருவேற்காட்டில் உள்ள நடிகை திவ்யாவின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

-விளம்பரம்-

திவ்யா வீட்டில் அர்னவ்:

ஆனால், நடிகை திவ்யா அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்திருக்கிறார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் நிறைய வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பின் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்திருக்கிறது. அப்போது அர்னவ், இந்த வீடு என்னுடைய பெயரில் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இதனை அடுத்து திவ்யா தரப்பு வக்கீல், அர்னவ் நிபந்தனை ஜாமினில் இருக்கும் போது இந்த வீட்டிற்கு வரக்கூடாது என்று கூறியிருக்கிறார். இதனால் இருதரப்பினரையும் புகார் அளிக்குமாறு போலீஸ் கூறியது. இதனை எடுத்து நடிகை திவ்யா அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார்.

திவ்யா அளித்த பேட்டி:

அதில் அவர், இவ்வளவு நாள் வீட்டுக்கு வராத அர்னவ் திடீர் என்று 13 பேருடன் வீட்டிற்கு வந்தார். கதவை தட்டி வலுக்கட்டாமயமாக உள்ளே வந்தார்கள். இதனை அடுத்து நான் என்னுடைய வழக்கறிஞர், காவல் துறைக்கு எல்லாம் தகவல் தெரிவித்தேன். எந்த பெண்ணும் அர்னவால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் ஆடியோ ரிலீஸ் செய்தேன். அதைக் கேட்டுவிட்டு தான் அர்னவ் இப்படி செய்கிறார். நான் இப்போது இருக்கக்கூடிய வீட்டை காலி செய்ய வேண்டும் என்று அவர் என்னை கொடுமைப்படுத்தி இருக்கிறார். என்னுடைய குழந்தைகளை அவர் கொல்ல முயற்சி செய்கிறார். இதை முதல்வர் பார்த்துக் கொண்டிருப்பார். அவர் நிச்சயம் என்னை காப்பாற்றுவார். இப்போது அவருக்கு வீடு வேண்டும் என்று பிரச்சனை செய்கிறார். நான் நிம்மதியாக இருக்க கூடாது என்று தான் இவர் இதையெல்லாம் செய்கிறார் என்று ஆவேசமாக பேசியிருக்கிறார்.

Advertisement