பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை பரீனா தன்னுடைய மகனின் முதல் பிறந்தநாளை கொண்டாடி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது.
மேலும், இந்த தொடரில் பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார். கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்தார். ரோஷினி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார். பின் கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். வினுஷா தேவி பார்ப்பதற்கு அச்சு அசலாக ரோஷினி போல் இருக்கிறார். தற்போது சீரியல் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. மேலும், இந்த தொடரில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பரீனா.
பரீனா குறித்த தகவல்:
இவர் இதற்கு முன் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இருந்தாலும், பாரதி கண்ணம்மா சீரியல் தான் பரீனாவுக்கு மக்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்தது. மேலும், இவர் தனியாக யுடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் அவர் நிறைய வீடியோக்கள் வெளியிட்டு இருக்கிறார். இதனிடையே இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு இவர் கர்ப்பமாக இருந்தார்.
பரீனா குடும்பம்:
அதுமட்டுமில்லாமல் குழந்தை பிறப்பதற்கு சில நாட்கள் முன்பு வரை சூட்டிங்கில் கலந்து கொண்டிருந்தார். இதனால் சின்னத்திரை வட்டாரத்தில் மட்டும் இல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் இவர் பாராட்டைப் பெற்றார். பின் பரினா குழந்தை பிறந்த பிறகு மீண்டும் சீரியலில் ரீ என்ட்ரி கொடுத்தவுடன் பலரும் தங்கள் சந்தோஷத்தை ஷேர் பண்ணி இருந்தார்கள். இவருக்கு ஆண் குழந்தை பிறந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை பிறந்த பிறகு மீண்டும் பரினா சின்னத்திரையில் நடித்து வருகிறார்.
சின்னத்திரையில் பரீனா:
மீண்டும் சீரியலில் வெண்பாவாக பரீனா கலக்கி கொண்டு இருக்கிறார். இந்த தொடரின் வெற்றிக்கு காரணம் வெண்பாக கதாபாத்திரம் என்றே சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் ஃபரீனா தன்னுடைய கணவருடன் சேர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார்.
பரீனா மகன் பிறந்தநாள்:
இந்த நிலையில் பரீனா தன்னுடைய மகனின் பிறந்த நாளை கொண்டாடி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, தற்போது பரீனா தன்னுடைய மகனின் முதல் பிறந்தநாளை துபாயில் கொண்டாடி இருக்கிறார். அங்கு எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை தான் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலருமே ஃபரீனாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.