பாடலை எழுதிவிட்டு 12 ஆண்டுகள் காத்திருந்த வைரமுத்து, ரிஜெக்ட் செய்த Msv, கையில் எடுத்து ஹிட்டாக்கிய AR ரஹ்மான்.

0
192
- Advertisement -

எம் எஸ் வி ஒதுக்கிய பாடலை ஏ ஆர் ரகுமான் பாடி ஹிட் கொடுத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. உலக அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். இவர் குறுகிய காலத்திலேயே பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் என எல்லா மொழி படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

கிட்டத்தட்ட இவர் சினிமா உலகில் இசையமைப்பாளராக நுழைந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. மேலும், இவர் சர்வதேச அளவில் திரைத் துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருதை அதுவும் இரண்டு விருதுகளை வென்று உலக அரங்கில் புகழ் பெற்றவர். இது ஒரு பக்கம் இருக்க சமீப சில மாதங்களாகவே சோசியல் மீடியாவில் ஏ ஆர் ரகுமான் குறித்த செய்திகள் அதிகமாக வைரலாகி வருகிறது.

- Advertisement -

புதிய முகம் படம்:

அந்த வகையில் பிரபல இசையமைப்பாளர் எம் எஸ் வி ஒதுக்கிய பாடலை ஏ ஆர் ரகுமான் கையில் எடுத்து சாதித்திருக்கும் தகவல் தான் தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, சுரேஷ் மேனன், ரேவதி நடிப்பில் வெளிவந்த படம் புதிய முகம். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்திருந்தார் .

அந்த வகையில் இந்த படத்தில் இடம்பெற்ற கண்ணுக்கு மை அழகு என்ற பாடலை வைரமுத்து தான் எழுதி இருக்கிறார். இந்தப் பாடல் வரியை கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு மேலாக தன்னிடமே வைரமுத்து வைத்திருக்கிறார். முதலில் இதை எம்.எஸ்.வி இடம் தான் காண்பித்து இருக்கிறார். ஆனால், எம்.எஸ்.வி.க்கு அந்த பாடல் பிடிக்காமல் திருப்பி அனுப்பி விட்டாராம். அதற்குப் பிறகு ஷங்கர் கணேஷ், ஷ்யாம் போன பல முன்னணி இசையமைப்பாளரிடம் இந்த பாடலை வைரமுத்து காண்பித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

ஏ ஆர் ரகுமான் ஹிட் ஆக்கிய பாடல்:

அனைவருமே பிடிக்காமல் திருப்பி அனுப்பி விட்டார்கள். அதற்குப் பிறகுதான் சுரேஷ் மேனன் நடிக்கும் புதிய முகம் என்ற படத்திற்கு பாடல் ஒன்று வேண்டும் என்று வைரமுத்துவிடும் கேட்டிருக்கிறார்கள். உடனே வைரமுத்து தன்னிடம் இந்த கண்ணுக்கு மை அழகு என்ற பாடல் வரியை கொடுத்திருக்கிறார். பத்து நிமிடத்தில் ஏ ஆர் ரகுமான் அந்த பாட்டு போட்டு கொடுத்திருக்கிறார். அந்த பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இப்படி எம் எஸ் வி ஏ நிராகரித்த அந்த பாடலை ஏ ஆர் ரகுமான் ஹிட் ஆக்கியது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டிருந்தது. இதை சமீபத்தில் ஒரு பேட்டியில் வைரமுத்துவை கூறியிருக்கிறார்.

ஏ ஆர் ரகுமான் இசை அமைக்கும் படம்:

மேலும், ஏ ஆர் ரகுமான் அவர்கள் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் லால் சலாம், அயலான், ஜீனி, கமல் ஹாசன் 234, சங்கமித்ரா, துருவ் விக்ரம் நடிக்கும் படம் போன்ற பல படங்களில் பிசியாக இசை அமைத்து வருகிறார். தற்போது ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியாகியிருக்கும் படம் பிப்பா. இந்த படத்தில் மிருணாள் தாக்குர், இஷான் கட்டர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் அமேசான் பிரைமில் கடந்த பத்தாம் தேதி ஹிந்தியில் வெளியாகியிருந்தது.

Advertisement