தெலுங்கு மற்றும் மலையாளத்தில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மாவில் நடிப்பது இவங்க தான்.

0
42291
Bharathi-Kannamma
- Advertisement -

தற்போது இருக்கும் கால கட்டங்களில் வெள்ளித்திரையில் ஒளிபரப்பாகும் படங்களை ரசிப்பதை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை ரசிக்கும் மக்கள் தான் அதிகமாக உள்ளனர். அந்த வகையில் தற்போது போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு சேனல்களிலும் தொடர்களை அதிகப்படுத்திக் கொண்டு வருகின்றனர் சேனல் நிறுவனம். இதனைத்தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எல்லா சீரியல்களுமே தூள் கிளப்புகிறது. இந்த நிலையில் விஜய் டிவியில் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி ஒளிபரப்பானது “பாரதி கண்ணம்மா” சீரியல். மேலும்,இந்த சீரியல் காதல், பாசம், குடும்பம் என கலவை கலந்த தொடராக உள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்த பாரதி கண்ணம்மா சீரியல் மலையாள மொழியில் “கருத்த முத்து” என்ற தொடரின் மூலம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது ஆகும்.

-விளம்பரம்-

கண்ணம்மா மற்றும் அஞ்சலி இருவரும் மாற்றான் தாய் சகோதரிகள். கண்ணம்மா கருமை நிறமுடையவள். ஆனால், அஞ்சலி வெள்ளை நிறம் கொண்டவர். கண்ணம்மாவுக்கு வெள்ளை(நல்ல) உள்ளம் இருந்தால் போதும் என்று நினைப்பவள். ஆனால்,அஞ்சலி தோற்றம் வெண்மையாக இருந்தால் போதும் என்று நினைப்பவள். பாரதி,அகிலன் இருவரும் அண்ணண்,தம்பி. இவர்கள் பணக்கார வீட்டு பையன்கள். பாரதி மருத்துவர். மேலும்,அஞ்சலியோ பாரதி மேல் ஆசைப்படுகிறார். ஆனால், பாரதி கண்ணம்மாவை தான் விரும்பி திருமணம் செய்து கொள்கிறார். இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அஞ்சலி பல சதி வேலைகள் செய்கிறாள். பாரதி–கண்ணம்மாவையும், அகிலன் –அஞ்சலியையும் திருமணம் செய்து கொள்கிறார்கள். பாரதி, அகிலனின் அம்மா சௌந்தர்யா.

இதையும் பாருங்க : சிவகார்த்திகேயன் மகளுடன் விஜய் பாடலுக்கு நடனமாடிய டிடி. மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கார் பாருங்க.

- Advertisement -

சௌந்தர்யாவுக்கு ஒரு அழகான பெண் தான் மருமகளாக வேண்டும் என்று நினைப்பவர். ஆனால், அதற்கு மாறாக அமைந்ததால் வீட்டில் ஏற்படும் குழப்பங்கள். மேலும், பாரதி கண்ணம்மா இவர்களின் வாழ்க்கையில் அஞ்சலியால் வரவிருக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து தான் இந்த கதை உருவானது. இந்நிலையில் இந்த பாரதி கண்ணம்மா சீரியல் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் தமிழில்( பாரதி கண்ணம்மா ) என்றும்,தெலுங்கில் (கார்த்திகை தீபம்) என்றும்,கன்னடத்தில்(முத்து லட்சுமி) என்றும் ஓளிபரப்பாகிறது.

மேலும்,இந்த இந்த பாரதி கண்ணம்மா சீரியல் பல மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து தமிழில் வரும் பாரதி கண்ணம்மா என்ற தொடரில் பாரதி என்ற கதாபத்திரத்தில் அருண் பிரசாத் நடிக்கிறார். கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் புது முக நடிகை ரோஷினி ஹரிப்பிரியன் நடிக்கிறார். மேலும், தெலுங்கில் ஒளிபரப்பாகும் இந்த கார்த்திகை சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் பிரிமி விஸ்வானந்த்தும்,பாரதி கதாபாத்திரத்தில் நிருபம் ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும்,இந்த சீரியலில் இருந்து ஒரு மனிதர் தன் வாழ்க்கை துணையாக தேர்ந்து எடுப்பது அழகையா?குணத்தையா? என்பதை இயக்குனர் அழகாக காட்டி உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement