ஒரு வாரமா கண்ணம்மா தூக்கினு சுத்துன அந்த பேக்ல என்ன இருக்குன்னு நீங்களே பாருங்க – வீடியோ இதோ. அட கடவுளே.

0
3160

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது.சின்னத் தம்பி பெரியதம்பி, ராஜா ராணி, மௌன ராகம், கடைக்குட்டி சிங்கம் என்று சினிமா டைட்டில்களை வைத்து ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் நல்ல வெற்றியை பெற்றது. அந்த வகையில் இதே பாணியில் சினிமா டைட்டிலை வைத்து ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்றுவருகிறது.

https://www.instagram.com/p/CFrD76jh4dF/

இந்த தொடர் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி துவங்கப்பட்டது. இந்த சீரியல் காதல், பாசம், குடும்பம் என எல்லாம் கலந்த கலவை தொடராக உள்ளது. இந்த பாரதி கண்ணம்மா சீரியல் மலையாள மொழியில் “கருத்த முத்து” என்ற தொடரின் தழுவல். மேலும், இந்த பாரதி கண்ணம்மா சீரியல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.தமிழில் இந்த சீரியலில் பாரதியாக மேயாதமான் படத்தில் நடித்த அருண் பிரசாத் நடிக்கிறார்.

- Advertisement -

இவருக்கு ஜோடியாக கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடிகை ரோஷினி நடிக்கிறார். இந்த சீரியல் இதுவரை 328 சீரியலை கடந்துள்ளது. இப்படி ஒரு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒளிபரப்பான இந்த சீரியலில் கண்ணம்மா கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விடுகிறார். கண்ணம்மா தொடர்ந்து நடந்து செல்வதை ட்ரோல் செய்து நெட்டிசன்கள் பல்வேறு மீம்களை போட்டு வச்சி செய்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CFrBNQjBnWj/

இதற்கு முன்னாள் எப்படியோ தெரியவில்லை கண்ணம்மா நடக்க ஆரம்பித்ததிலிருந்து மீம்கள் குவிய இந்த சீரியலின் ரீச் வேற லெவலில் சென்று கொண்டு இருக்கிறது.இப்படி ஒரு நிலையில் கடந்த ஒரு வாரமாக கண்ணம்மா தூக்கி கொண்டு அலைந்த பையில் என்ன இருந்தது என்று வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் என்ன அப்படி இருக்குனு நீங்களே பாருங்க.

-விளம்பரம்-
Advertisement