பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்க சொல்லி 4 முறை டார்ச்சர் செய்தார்கள்! பிரபல நடிகை புகார் ?

0
3814
iniya

சமீபத்தில் விஜய் டீவியில் பிக் பாஸ் ரியாலிட்டி தமிழில் முதல் முதலாக நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கு பொதுவாக பல்வேறு துறைகளில் இருந்து போட்டியாளர்களை அழைப்பது வழக்கம். தமிழில் முதல் சீசன் எனபதால் ஜூலியைத் தவிர அனைவரையும் திரைத்துறையில் இருந்து அழைத்திருந்தனர்.
Iniyaஅதில் பங்குகொள்ள பாடலாசிரியர் ஸ்நேகன், நடிகர் கனேஷ் வெங்கட்ராமன், மாடல் ஆரவ், நடன இயக்குனர் காயத்ரி , ஓவியா ஆர்மி தலைவி ஓவியா என பலர் கலந்து கொண்டனர். மேலும், நிகழ்ச்சியின் துவக்கத்திற்கு முன்னர் அ.தி.மு.க வின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், மேலும் பல அரசியல் பிரபலங்கள் கலந்துகொள்ள வைக்க பேச்சு வார்த்தை நடந்தது.

அதே போல் தான் நடிகை ‘இனியாவிடமும் போட்டியில் கலந்து கொள்ள பேச்சு வார்த்தை நடந்திருக்கிறது. பிரபல வாரப் பத்திரிக்கைகு கொடுத்த பேட்டியில் அவர் இதனைப் பற்றி கூறியுள்ளார்.
இவரை, முதலில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விஜய் டீவி நிர்வாகம் அழைத்தபோதே மறுத்துள்ளார். பின்னர் மீண்டும் மீண்டும் அவரை 4,5 முறை கலந்துகொள்ளச் சொல்லி வற்ப்புருத்தியதாகத் தெரிகிறது.
iniya இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதால் கிடைக்கும் ஃபேமஸ் சிறு காலங்களில் மறைந்துவிடும் என மீண்டும் மறுத்துள்ளார் இனியா.