பிக்பாஸ் ஜூலியின் புதிய அம்மன் அவதாரம்..! வெளியான அம்மன் தாயி பாடல்..! வீடியோ இதோ

0
1855
Julie
- Advertisement -

விஜய் டிவி யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார் ஜூலி. இவர் அந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டதால் இவரை ஜல்லிக்கட்டு ஜூலி என்று அழைத்தனர். ஜல்லிக்கட்டு வரை இவருக்கு நல்ல பெயர் இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் பங்குபெற்ற பின்னர் இவரை பலரும் வெறுத்தனர்.

-விளம்பரம்-

- Advertisement -

தற்போது ஜூலி சில மாதங்களுக்கு முன்னர் நீட் தேர்வு பிரச்சனையால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவாக’ உத்தமி’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்.இதை தொடர்ந்து ஜூலியன் அடுத்த அட்ராஸிட்டியாக தற்போது ஜூலி ‘அம்மன் தாயி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்னர் ஜூலி அம்மன் கெட் அப்பில் இருப்பது போன்று சில புகைப்படம் வெளியானது. அதனை கண்ட ரசிகர்கள் காண்டாகி ஜூலியை கிழி கிழித்தனர். தற்போது எரியும் தீயில் என்னை ஊற்றுவது போல அந்த படத்தின் “அழைக்கட்டுமா தாயே அழைக்கட்டுமா” என்ற பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

கேசவ் புரடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள “அம்மன் தாயி ” படத்தை மகேஷ்வரனும், சந்திரஹாசனும் இணைந்து இயக்கியுள்ளனர். மேலும், இந்த படத்திற்கு பிரேம்குமார் சிவபெருமான் என்பவர் இசையமைத்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள “அழைக்கட்டுமா தாயே அழைக்கட்டுமா” பாடலை பிரபல பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி பாடியுள்ளார்.

Advertisement