புதிய கெட்டப்பில் கலக்கும் ஓவியா.! சிம்பு, ஆரவ்வுடன் வைரலாகும் புகைப்படம்

0
1055
oviya-actress

தமிழில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘களவாணி’ படத்தில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. அந்த படத்திற்கு பின்னர் பல படங்களில் நடித்த ஓவியா பின்னர் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகிழ்ச்சியில் பங்குபெற்று தமிழ் ரசிகர்களின் அபிமாணத்தை பெற்றார்.

bigg boss oviya

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி யாருக்கு பெரும் புகழையும் சம்பாதித்து தந்ததோ இல்லையோ, ஆரவிற்கும், நடிகை ஓவியாவிற்கும் பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது. சொல்லப்போனால் ஆராவ், ஓவியாவை வைத்து தான் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார் என்றும் கூறலாம். ஓவியா மற்றும் ஆரவ் காதலிப்பதாகவும் பல தகவல்கள் வெளியான நிலையில் தற்போதும் இவர்கள் ஒன்றாக ஊர் சூரி வரும் புகைப்படங்களும் ,விடீயோக்களும் வெளியாகி வந்த வண்ணம் இருக்கிறது.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ஓவியா பின்னர் தனது முடியை ஆண்களை போல கட் செய்து கொண்டார். சில காலமாக முற்றிலும் ஷார்ட் முடியுடன் இருக்கும் கெட்டப்பில் இருந்த நடிகை ஓவியா, தற்போது மீண்டும் வித்யாசமான ஹேர் ஸ்டைளுக்கு மாறியுள்ளார். சமீபத்தில் நடிகர் சிம்பு, ஆரவ் போன்றவர்களுடன் ஒன்றாக இருக்கும் ஓவியாவின் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

oviya bigg boss

oviya

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் மற்றும் ஓவியா ஜோடி தான் பிக் பாஸ் வீட்டின் லைம் லைட்டாக இருந்து வந்தனர். அதிலும் குறிப்பாக நடிகை ஓவியாவுக்கு அவரது உண்மையான குணத்திற்காக பல ரசிகர்கள் அவருக்கு சமூக வலைத்தளங்களில் ஓவியா ஆர்மியை கூட தொடங்கினர். இந்நிலையில் தற்போது நடிகை ஓவியாவை புது லுக்கில் பார்த்த ஓவியா ஆர்மி ரசிகர்கள் குசியடைந்துள்ளனர்.