பிக் பாஸ் 2 எப்போது தெரியுமா ? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
5755
Bigg boss 2
- Advertisement -

தமிழ் மக்களுக்கு அறிமுகம் ஆகாத ஒரு ரியாலிட்டி ஷோ, கடந்த வருடம் விஜய் டீவியில் அரங்கேறியது. பிக் பாஸ் என அழைக்கப்பட்ட இந்த ஷோ, சர்வதேச அளவில் கமர்சியலாகவும் கருத்தியளாகவும் வெற்றி பெற்ற ஒரு ஷோ ஆகும்.தமிழ் ரசிகர்களுக்கு சென்ற வருடம் இதன் முதல் பாகம் அறிமுகம் ஆனது. இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமஹாசனே தொகுத்து வழங்கியதால் அவரின் மீது உள்ள ஈர்ப்பின் காரணமாக இந்த நிகழ்ச்சியை மக்கள் பார்க்க துவங்கினர்.

bigg-boss-tamil

பின்னர்தான் தெரிந்தது இது அடுத்த வீட்டு விஷயங்களை எட்டிப் பார்த்து புறணி பேசும் நம்ம ஊரு வேளையின் எலைட் வெர்சன் என. இதனால் இந்த நிகழ்ச்சி நடைபெற்ற 100 நாட்களும் விடாமல் பார்த்து வெற்றி பெற செய்தனர் மக்கள் .

- Advertisement -

தற்போது முதல் சீசன் முடிந்து இரண்டாம் சீசன் எப்போது வரும் என மக்கள் கேட்கும் அளவிற்கு வளர்ந்த இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் இந்த வருட ஜூன் மாதம் துவங்க உள்ளது. இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் மிக ஆவலாக அந்த நிகழ்ச்சியை எதிர் நோக்கி உள்ளனர்.

Advertisement