பிக் பாஸ் 5 இறுதி போட்டி குறித்து ஆரி போட்ட ட்வீட் – முன்னாள் டைட்டில் வின்னருக்கே இந்த நிலைமையா ?

0
466
aari
- Advertisement -

பிக் பாஸ் இறுதி போட்டிக்கு வர முடியாத காரணம் குறித்து ஆரி மற்றும் பாலாஜி பதிவிட்ட ட்வீட் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. கடந்த ஆண்டு தான் அக்டோபர் மாதம் தான் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதுவரை இல்லாத பல மாற்றங்களை இந்த முறை பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கொண்டு வந்திருந்தார்கள். அதேபோல் தமிழ் பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக திருநங்கைக்கு வாய்ப்பு கொடுத்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் தெரிந்த முகங்களை விட தெரியாத முகங்கள் தான் அதிகம் இருந்தார்கள். மேலும், பல விறுவிறுப்புடன் பிக் பாஸ் நிகழ்ச்சி சென்றது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவு வாரத்தை எட்டி இருக்கிறது. இந்த நிலையில் யார் டைட்டில் வின்னர் ஆகப் போகிறார்கள் என்று ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளார்கள். மேலும், 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 5 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் உள்ளார்கள்.

- Advertisement -

பட்டத்தை வெல்லப் போவது யார் :

பிரியங்கா, பவானி, ராஜு, நிரூப், அமீர் என இந்த பேரும் தான் பிக்பாஸில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள். இவர்களில் யார் டைட்டில் வின்னர் என்பது நாளை முடிவாகிவிடும். மேலும், இந்த வாரம் பதிவு செய்யப்படும் வாக்குகளின் அடிப்படையில் அதிக வாக்குகள் பெற்றவர் தான் டைட்டில் வின்னர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இப்படி ஒரு நிலையில் இதுவரை வந்த தகவலின் படி ராஜு தான் அதிக வாக்குகள் பெற்றுள்ளார்.

ஆரிக்கு அழைப்பு கொடுக்கவில்லையாம் :

பொதுவாக பிக் பாஸ் இறுதி போட்டியின் போது ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்கள் மற்றும் முன்னாள் போட்டியாளர்களும் கலந்துகொள்வார்வார்கள். இப்படி ஒரு நிலையில் இறுதி போட்டியில் கலந்துகொள்ள தனக்கு அழைப்பு வரவில்லை என்று கடந்த சீசனின் வெற்றியாளர் ஆரி பதிவிட்டு இருக்கிறார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், பிக் பாஸ் 5வின் கோப்பை அளிக்கும் நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்வேன் என்று நீங்கள் எதிர்பார்த்துகொண்டு இருக்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும்.

-விளம்பரம்-

ட்ரெண்டிங்கில் வந்த ஆரி :

நானும் உங்களையும் கமல் சாரையும் மீண்டும் சந்திக்க ஆவலாக இருந்தேன், ஆனால் துரதிர்ஷ்டவசமாக நான் நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை என்று பதிவிட்டுள்ளார். ஆரியின் இந்த பதிவை தொடர்ந்து ட்விட்டரில் #Aari ட்ரெண்டிங்கில் வந்து உள்ளது. ஆரியை போல கடந்த சீசனில் இரண்டாம் இடத்தை பிடித்த பாலாஜியும் பிக் பாஸ் இறுதி போட்டிக்கு அழைக்கப்படவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

பாலாஜி சொன்ன காரணம் :

இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், நான் இறுதிப்போட்டிக்கு செல்கிறேனா என்று கேட்டு கொண்டு இருக்கும் ரசிகர்களுக்குலாக்டவுன் விதிமுறைகளால் எங்களுக்கு அழைப்பு வரவில்லை ஏற்கனவே செட்டில் இருக்கும் பலர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் இந்த சீசனில் கலந்துகொண்ட அண்ணாச்சி, மதுமிதா, அபிஷேக் ஆகியவர்களும் இறுதி போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லையாம்.

Advertisement