19 கோடி ஓட்டு, ஆரியை விட அதிகம், அர்ச்சனாவின் உருட்டால் கடுப்பான நெட்டிசன்கள். ஆரியின் பதிலை பாருங்க

0
341
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 106 நாட்கள் கடந்து சமீபத்தில் தான் கோலாகலமாக முடிவடைந்து இருக்கிறது. இந்த சீசன் தொடங்கிய நாளில் இருந்து முடியும் வரை அனல் பறக்க பரப்பாக சென்றது. இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்த அர்ச்சனா தான் டைட்டில் பட்டத்தை வென்று இருக்கிறார். இவரை அடுத்து இரண்டாம் இடத்தை மணி, மூன்றாம் இடத்தை மாயா, நான்காம் இடத்தை தினேஷ், ஐந்தாம் இடத்தை விஷ்ணு பிடித்து இருக்கிறார்கள். டைட்டில் வென்ற அர்ச்சனாவுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.

-விளம்பரம்-

பலர் அர்ச்சனாவுக்கு டைட்டில் கிடைத்ததை கொண்டாடினாலும் சிலர் விமர்சித்தும், இவர் பிஆர் வேலையினால் தான் வெற்றி பெற்றார் என்றெல்லாம் கேலி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் முதன்முதலாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அர்ச்சனா கொடுத்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், எனக்கு 19 கோடி மக்கள் வாக்களித்து வெற்றி பெற்றேன் என்று நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது. என்னால் நம்பவும் முடியவில்லை ஆச்சரியமாக இருக்கிறது.

- Advertisement -

அர்ச்சனா பேட்டி:

மக்களுக்கு தான் நான் நன்றி சொல்லணும். அதேபோல் பலரும் பி ஆர் வேலை பார்த்து நான் வெற்றி பெற்றேன் என்று சொல்லி இருக்கிறார்கள். ஒரு ஓட்டிற்கு ஒரு ரூபாய் என்று சொன்னாலும் 19 கோடி கொடுத்து தான் நான் வெற்றி பெற்றேனா? 18 கோடி மக்கள் என் மீது பாசம் வைத்திருந்தாலும் ஒரு கோடி கோடி ரூபாய் கொடுத்து நான் வெற்றி பெற்றேன் என்று சொல்வதெல்லாம் சிரிப்பாக இருக்கிறது.

காசு கொடுத்து வெற்றி பெற்றேனா:

அந்த ஒரு கோடி இருந்திருந்தால் நான் சிறிய பட்ஜெட்டில் ஒரு படம் எடுத்து நான் கதாநாயகியாக நடித்திருப்பேன்.இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு? பொய்யான வதந்திகள். போற்றுபவர்கள் போற்றட்டும், தூற்றுபவர்கள் தூற்றட்டும் நம்முடைய வேலையை பார்க்கலாம்’ என்றும் கூறி இருந்தார். அர்ச்சனாவின் இந்த பேட்டியில் ஆரியை விட அதிக ஓட்டு வாங்கியதாக சொன்னது தான் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

-விளம்பரம்-

ஆரியின் பதில் :

அந்த வகையில் X தளவாசி ஒருவர் ‘ஆரி போட்ட முயற்சியில 1% கூட போடல. இதுல இவங்களுக்கு ஆரிய விட ஓட்டு அதிகமாக வந்ததாம். முயற்சியை கூட விடு ஒரு வீட்டு வேலை செய்ய சொன்னா கூட காரணம் சொல்லிட்டு எஸ்கேப் மட்டும் ஆகிட்டடிருந்த உனக்கு இந்த ஆசை வேற இருக்கா’ என்று கேலி செய்து இருந்தார். மேலும், இந்த பதிவில் ஆரியையும் அந்த டேக் செய்து இருந்தார்.

அர்ச்சனா பதில் :

இந்த பதிவிற்கு பதில் அளித்துள்ள ஆரி ‘ மக்களே தயவு செய்து அவரை தனியாக விடுங்கள் அவருடைய வெற்றியை அவர் கொண்டாடும் நேரம் இது அவரது வெற்றிகரமான இந்த பயணத்திற்கு வாழ்த்துவோம் என்று பதில் அளித்துள்ளார். ஆரியின் இந்த பதிவிற்கு stophatred #gameover #spreadlove #SpreadPositivity #timetomoveon போன்ற ஹேஷ் டேக்குகளை மட்டும் போட்டுள்ளார் அர்ச்சனா.

Advertisement