நான் போனா தானே சொல்றாங்க , நீங்க விளையாடுங்க – லவ் கேங்கால் புலம்பும் ஆரி-பாலாஜி.

0
1327
1

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 11 வாரத்தை கடந்து இருக்கிறது. கடந்த வார நாமினேஷனில் ஆரி, ஆஜீத், அனிதா, அர்ச்சனா, ரியோ, ஷிவானி,சோம் சேகர் ஆகியோர் இடம்பெற்றனர் . எனவே, இந்த வாரமும் லவ் பேட்டில் இருந்து யாராவது வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் அர்ச்சனா தான் வெளியேறுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். அதே போல பல்வேறு தனியார் வலைத்தளங்களில் நடத்தப்பட்டு வந்த ஓட்டிங்கில் அர்ச்சனாவிற்கு தான் குறைவான வாக்குகள் பதிவானது.

இதில் எதிர்பார்த்தது போலவே அர்ச்சனா தான் வெளியேற்றப்பட்டார். சம்யுக்தவிற்கு பின்னர் அர்ச்சனாவின் வெளியேற்றம் தான் ரசிகர்களுக்கு கொஞ்சம் திருப்தியான வெளியேற்றமான அமைந்து இருந்தது. இது ஒருபுறம் இருக்க கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்கின் அடிப்படையில் டாஸ்க் மற்றும் வாரம் முழுதும் சிறப்பாக செயல்பட்ட போட்டியாளர்களை தேர்ந்தெடுத்தனர். இதில் அர்ச்சனா, ரம்யா, பாலாஜி ஆகிய மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அர்ச்சனா வெற்றி பெற்று அடுத்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- Advertisement -

அர்ச்சனா வெளியேறியதால் தன்னுடைய கேப்டன் பதவியை பாலாஜிக்கு கொடுத்துவிட்டு சென்றார் அர்ச்சனா. இதனால் முதல் முறையாக வீட்டின் தலைவரானதோடு மட்டுமல்லாமல் இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்தார் பாலாஜி. இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் இன்று கொடுக்கப்பட்டுள்ள டாஸ்கில் பாலாஜி மற்றும் சோம் சேகருக்கு ஏதோ வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஆரி, மற்றும் பாலாஜி இருவரும் சோம், கேபி, ரியோ ஆகியோர் ஏதோ பேசி வைத்து ஆடுவதாக புலம்பி உள்ளார்கள்.

இது ஒருபுறம் இருக்க இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் ஆரி, அனிதா, கேப்ரில்லா, ஷிவானி, ஆஜித் ஆகியோர் நாமினேட் ஆகி இருக்கிறார்கள். கடந்த இரண்டு வாரங்களாகவே லவ் பெட்டில் இருந்து ஜித்தன் ரமேஷ், நிஷா, அர்ச்சனா ஆகியோர் தான் போட்டியாளர்கள் வெளியேறி இருந்தார்கள் இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement