நான் பண்ண சின்ன தவறால் அந்த பட வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு போயிடுச்சு – ரகசியத்தை போட்டு உடைத்த ஆரி

0
430
- Advertisement -

நடிகர் ஆரி தவற விட்ட பட வாய்ப்பு குறித்து பேசி இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக ஆரி திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் வெளிவந்த ரெட்டைசுழி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் நெடுஞ்சாலை, மாயா, முப்பரிமாணம், நாகேஷ் திரையரங்கம் போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார். பின் ஆரி அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானர்.

-விளம்பரம்-
Bigg Boss Winner Aari First Ever Video After Bigg Boss

அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னரும் ஆரியே ஆவார். இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்து இருக்கிறது. நடிகர் ஆரி அவர்கள் சினிமா தவிர சென்னை வெள்ளம், ஜல்லிக்கட்டு பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை போன்ற அனைத்து சமுதாய பிரச்சனைக்கும் முன்னின்று குரல் கொடுத்து இருக்கிறார். தற்போது இவர் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி இருந்த நெஞ்சுக்கு நீதி என்ற படத்தில் ஆரி நடித்திருந்தார். தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகி இருந்த படம் நெஞ்சுக்கு நீதி. இயக்குனர் அனுபவ் சின்ஹாவின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஆர்டிக்கள் 15’.

- Advertisement -

நெஞ்சுக்கு நீதி படம்:

இந்த படத்திற்கு இந்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழில் நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் அருண்ராஜா காமராஜ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் தான்யா ரவிச்சந்திரன், சிவானி ராஜசேகர், சுரேஷ் சக்ரவர்த்தி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். போனி கபூர் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார். படத்தில் நேர்மையான ASP அதிகாரியாக விஜயராகவன் என்ற கதாபத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கிறார். இவரை பொள்ளாச்சிக்கு பணி மாற்றம் செய்கிறார்கள். அப்போது அங்கு இரண்டு சிறுமிகள் கொலை செய்யப்பட்டு ஊரின் நடுவே உள்ள மரத்தில் தூக்கில் தொங்க விடப்படுகிறார்கள்.

நெஞ்சுக்கு நீதி படத்தின் கதை:

இந்த வழக்கை விசாரணை செய்யும் உதயநிதி ஸ்டாலினுக்கு அடுத்தடுத்து பல அதிர்ச்சி அளிக்கும் விஷயம் தெரியவருகிறது. ஆனால், அவரை சுற்றி பலர் சூழ்ச்சி செய்கிறார்கள். இவர்கள் சுற்றி சூழ்ச்சியிலிருந்து தப்பித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதயநிதி நீதியை வாங்கி கொடுத்தாரா? அந்த மூன்றாவது சிறுமிக்கு என்ன ஆனது? இறுதியில் சட்டம் நீதியின் பக்கம் நின்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் ஆரியின் பழைய வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அதில் ஆரி தான் தவறவிட்ட பட வாய்ப்பை குறித்து கூறி இருப்பது,

-விளம்பரம்-

ஆரி அளித்த பேட்டி:

இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடிப்பது குறித்து பேச காலையில் ஒன்பது மணியிலிருந்து 10 மணிக்கு என்னை வர சொல்லி இருந்தார். நானும் சரி என்று சொல்லி இருந்தேன். பின் நான் அவரை பார்க்க கிளம்பும் போது என் வீட்டில் உறவினர்கள் பத்திரிக்கை வைப்பதற்கு வந்திருந்தார்கள். அந்த சமயம் என்னுடைய அம்மா கோயிலுக்கு சென்று இருந்ததார். பத்திரிக்கையை வாங்கி வை என்று கூறியிருந்தார். எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. பின் இயக்குனரிடம் போன் செய்து என்னுடைய நிலைமையை எடுத்துச் சொன்னேன். உடனே அவர், நான் என்ன சொன்னேன், எந்த நேரத்திற்கு வர சொன்னேன்? நீ எந்த நேரத்திற்கு வருவாய்? என்று போனை கட் பண்ணிவிட்டார்.

ஆரி தவற விட்ட பட வாய்ப்பு:

வீட்டை பூட்டிவிட்டு செல்லவும் முடியவில்லை. வந்தவர்கள் பார்த்துவிட்டு திரும்பி விடுவார்கள். அதனால் தேவையில்லாமல் பிரச்சனை வரும் என்று நினைத்தேன். அதே சமயம் இயக்குனரையும் சந்திக்காமல் இருக்க முடியவில்லை. பிறகு நான் போன் செய்து அவரிடம் பேசும்போது என்னுடைய வேலையெல்லாம் முடித்துவிட்டு கூப்பிடுகிறேன் என்று சொன்னார். அதற்கு பிறகு தான் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் விஜய் சேதுபதி நடித்து இருந்தார். தமிழ் சினிமாவிற்கு ஒரு அற்புதமான நடிகரை இயக்குனர் சீனுசாமி தந்திருக்கிறார் என்று ஆரி கூறி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement