ஆரியுடன் நான் இருக்கிறேன், அவர் தான் வெற்றி பெறுவார் – ஓப்பனாக கூறிய பிக் பாஸ் 3 நடிகை.

0
2739
aari
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி வளர்ந்து வருபவர் நடிகர் ஆரி. இவர் இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியான ‘ரெட்டைசுழி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் நடிகராக அறிமுகமானர். இதனைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு கிருஷ்ணா இயக்கத்தில் நெடுஞ்சாலை என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தின் மூலம் தான் நடிகர் ஆரி மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். இதனைத் தொடர்ந்து மாலை பொழுதின் மயக்கத்திலே, மாயா, உன்னோடு கா, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

ஆரம்பம் முதலே ஆரிக்கு பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட போட்டியாளர்களில் விரோதம் தான் கிடைத்தது. அது மட்டுமல்லாமல் ஆரி எப்போதும் அறிவுரை செய்து கொண்டே இருக்கிறார். மேலும், மற்றவர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார் என்று மற்ற போட்டியாளர்களை அனைவருமே இவருக்கு முத்திரை குத்தினார்கள். ஆனால், நாட்கள் செல்ல செல்லஆரிக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்தது. மேலும், இந்த சீசனில் அதிக முறை நாமினேட் செய்யப்பட்ட ஆண் போட்டியாளர்களில் ஆரி இதன் முதல் ஆளாக இருந்து வருகிறார். இருப்பினும் இவருக்கு இருக்கும் மக்கள் ஆதரவால் தொடர்ந்து காப்பாற்றப் பட்டு வருகிறார்.

இதையும் பாருங்க : அன்றும் இன்றும் – வையாபுரிக்கு இவ்ளோ பெரிய மகன் மற்றும் மகளா – அதுவும் அவர் மகளுக்கு இப்படி ஒரு திறமை.

- Advertisement -

அதிலும் கடந்த சில வாரங்களாக இவருக்கும் பாலாவிற்கும் ஏற்பட்டு வரும் கடுமையான வாக்குவாதங்களில் பாலாஜி கண்ட மேனிக்கு தரம் தாழ்ந்து பேசினாலும் ஆரி கண்ணியம் தவறாமல் பொறுமையை காத்து வருவது பலரையும் கவனத்தையும் ஆரியின் பக்கம் திருப்பியது. இப்படி ஒரு நிலையில் ஆரி குறித்து முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும் நடிகையுமான ரேஷ்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Reshma

அதில் ஆரியுடன் நான் இருக்கிறேன். அவர் தான் பிக் பாஸ் டைட்டிலை வெல்வார் என்பது என்னுடைய கருத்து என்று கூறியுள்ளார் ரேஷ்மா. இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த வாரம் தலைவர் போட்டியில் வென்றதால் ரியோ ஏற்கனவே இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டார். மேலும், இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாரம் நாமினேஷனும் நடைபெற இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement